புத்தக மதிப்புரை : மகரந்த ரகசியங்கள்
- நூலின் பெயர் : மகரந்த ரகசியங்கள்
- நூல் ஆசிரியர் : கவிஞர் சிபி
- மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் : மகரந்த ரகசியங்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் சிபிமதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
நூலின் அட்டைப்டமே சிந்தனையை விதைக்கின்றது. குளத்தில் இலை விழுந்ததும் பரவும் அதிர்வுகள் மிக நன்று. எழுத்தாளர்கள் தமிழன்பன், மனுஷயபுத்திரன் வழங்கி உள்ள அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக உள்ளது. நூலின் காணிக்கையை ஹைக்கூவாகவே எழுதி உள்ளது மிகச் சிறப்பு.
அகலும் திரியுமாகிஎன்னைச் சுடராக்கியஎந்தைக்கும் தாய்க்கும்
தாய்,தந்தையரின் தியாகத்தை மிகக் குறைந்த சொற்களின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றார் நூல் ஆசரியர் கவிஞர் சிபி. இவர் சென்னையில் அறைகள் அழுகுபடுத்தும் பணியினை தொழிலாக செய்து கொண்டே இலக்கியத்திற்கும் அழகு சேர்த்து வருகின்றார்.இயந்திரமயமான உலகில் இலக்கியத்திற்கு ஏது நேரம் என்று சொல்லும் தொழில் அதிபர்கள் உண்டு. ஆனால் அவர்கள் இயந்திரமாகவே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
மகரந்த இரகசியங்கள் என்ற இந்த ஹைக்கூ கவிதை நூலை படித்து முடித்ததும்,நமது இதயம் இதமாகின்றது. படித்துப் பார்த்தால் நான் சொன்னதை உண்மை என்பதை நீங்களும் உணருவீர்கள்.
ஹைக்கூ கவிதைகளை குறை சொன்னவர்கள் எல்லாம் இன்று எங்கோ மறைந்துவிட்டனர். கட்டிட பொறியாளர் முதல் சாதாரண தொழிலாளி வரை ஹைக்கூ படைப்பாளராக முத்திரை பதித்து வரும் காலம் இது. இயற்கையை மிகவும் ரசித்து, ரசனையோடு பல ஹைக்கூ கவிதைகளை படைத்து உள்ளார். தொலைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சிக்கு அடிமையானதிலிருந்து இயற்கையை ரசிக்க நேரமில்லாமல் போனது. இப்படி ஹைக்கூ வழியாகவாவது இயற்கையை ரசிப்போம். மகரந்த ரகசியங்களை அம்பலப்படுத்துகின்றார் கவிஞர் சிபி.
காலைப் பனியில்உறைந்த பார்வைநடுங்கும் புல்
கோடைப் பகல் – தோட்டத்தில்இங்குமங்குமாய் பூக்கிறதுமஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி
ஒரு ஹைக்கூவை படிக்கும் போதே நம் மனத்தின் முன் அந்த நிகழ்வு காட்சியாகி விடுகின்றது. இது தான் படைப்பாளியின் வெற்றி.
மார்கழிக் குளிரில்வாசலில் தவமிருக்கும்பூசணிப் பூக்கள்
இரவெல்லாம் பெய்த மழைசுவடில்லாமல் துடைக்கிறதுகாலைச் சூரியன்
காய்ந்து சருகான மலர்காம்பிலிருந்து விடுபடுகிறதுஇதழ் இதழாக
இப்படி ஒவ்வொரு ஹைக்கூவும் நமக்குள் ஆனந்தத்தை விதைக்கின்றன.
பின்னிரவு தனியாகவீடு திரும்புகையில்திரும்பி நடக்கும் சுவடுகள்
அமைதியான இரவுதூரத்து மலையில்எரியும் நெருப்பு
நிசப்தமான வீதிஅதிர்ந்து பரவுகிறதுஇராப்பிச்சைக்காரன் குரல்
மனைவி ஊரிலில்லாதஓற்றை இரவினில்உரக்கக் கத்தும் தவளைகள்
மேலை நாட்டு அறிஞர்கள், கவிஞர்கள் போல தமிழ்நாட்டு கவிஞர்களுக்கு ஹைக்கூ வராது என்று சொன்னவர்கள் வெட்கப்படும் வண்ணம் மிகச்சிறப்பான கவித்துவமான சிந்தனைக்குரிய ஹைக்கூ கவிதைகளின் அணிவகுப்பு இந்த நூல். இரவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், நாட்டில் வறுமை உள்ளது. மனைவி வீட்டில் இல்லை என்றால் கணவனுக்கு தூக்கம் வராது, விழித்து இருப்பான், தவளை கத்துவதைக் கூட உற்று நோக்குவான் என்ற நாட்டு நடப்பையும், நன்கு பதிவு செய்துள்ளார்.
நூலாசிரியர் இந்த நூலில் ஹைக்கூ மட்டும் எழுதவில்லை. ஹைபுன் இலக்கணத்தை உணர்ந்து மிகவும் நேர்த்தியாக ஹைபுன் படைத்து சிந்திக்க வைத்துள்ளார்.
வராண்டாச் சுவரில்விசிறியடிக்கப்படும்தேநீரின் சுவை
ஆண்டுப்பலவாக நிலை பெற்றிருந்ததுஇப்போது இல்லை எதுவும்மாமர நிழலும் பாசமும்
என் சிறிய ஜன்னலில் விடியல்கவிதை முகிழ்க்கமௌனமாய் புலரும்ஹைபுன் படி கவிதைக்கு முன்பான காட்சி விளக்கமே கவித்துவமாக இலக்கியத்தரமாக உள்ளது. ரசித்துப் படித்தாலே ருசிக்கும் ஹைக்கூ ஹைவுன் விருந்து தான் இந்நூல். கவிஞர் சிபியின் இயற்பெயர் இராஜாராம். ஹைக்கூ எழுதுவதில் இராஜாவாக உள்ளார், பாராட்டுக்கள். நல்ல முயற்சி,மேல்நாட்டு ஹைக்கூ கவிஞர்களை விஞ்சும் வகையில் இயற்கையை பாடுபொருளாகக் கொண்டு பாடி வெற்றி பெற்றுள்ளார் நூல் ஆசிரியர் சிபி. சின்ன வேண்டுகோள், இனி வரும் காலங்களில் பட்டாம்பூச்சி, பனித்துளி தவிர்த்துப் பாடுங்கள், நீங்களே நிறையைப் பாடி உள்ளீர்கள்












