• TamilBookMarket.com

  • புத்தக மதிப்புரை :கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள்

Feb 14

புத்தக மதிப்புரை :கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள்

  • நூலின் பெயர் : கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள்
  • நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
அட்டைப்பட ஓவியம் மிக நன்று. நடவு வெளியீடாக வந்துள்ள இந்நூல் வடிவமைப்பு மின்னல் கலைக்கூடம். நூலாசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தியின் பெயரிலேயே நிலா இருப்பதால், நிலாவைப் போல அழகான கவிதைகளை வடித்து உள்ளார். நிலவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அதுபோல் இந்நூல் கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் சலிக்கவில்லை. நமக்குள் மலரும் நினைவுகளை தோற்றுவிக்கின்றது.
புதுக்கவிதை என்ற பெயரில்,நவீனம் என்ற பெயரில்,புரியாத புதிராக கவிதை எழுதி வருகின்றது ஒரு கூட்டம். அவர்களது கவிதைக்கு கோனார் உரை ஒன்று வெளியிட்டாலே வாசகருக்கு புரியும். ஆனால் இந்நூல் கவிதைகள்,வாசகருக்கு எளிதாக புரிகின்றது. கவிஞர் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை, சந்தித்த மனிதர்களை,உள்ளத்து உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார்.
நூலின் பெயர் “கழிந்த நிமிடங்களின் மௌனங்கள்” என்று இருந்திருந்தால் இன்னும் இனிமையாகின்றது. இந்த நூலைப் படித்திட கழிந்த நிமிடங்கள் பயனள்ளவையாகின்றது. அது தான் நூலின் வெற்றி. திரு.கே.எம்.நாச்சிமுத்து அவர்களின் அணிந்துரை நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது. புலவர் த.மா.பொன்னுசாமி அவர்களின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது. கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி,தன்னுரையில் குறிப்பிட்டது போல.
இயந்திரத் தனமான வாழ்க்கை சூழலிலிருந்து சற்றே விலகி. இளைப்பாறும் இடம்,இலக்கியம்,கவிதை, எழுத்து, இது தற்கால நிகழ்வு. இந்நூலை படிக்கும் போது கிடைக்கும் இதமே. இலக்கியத்தின் மேன்மையை உணர்த்தும்.
கவிதை எழுத வேண்டுமென்ற முடிவுடன், தனக்குத் தெரிந்த மொழிப் புலமையெல்லாம் பயன்படுத்தி, ஒப்பனைகள் செய்து எழுதவில்லை இவர். தனக்குத் தெரிந்த எளிமையான சொற்களால் மிக எளிமையாக பதிவு செய்துள்ளார். அது தான் நூலின் சிறப்பு. கவிதைகளுக்கு தலைப்பு எதுவும் தராதது வித்தியாசமாக உள்ளது. ரசிக்கும்படி உள்ளது. காதலியின் மௌனம் நமது மனங்களில் எவ்வளவு அதிர்வுகளை உண்டாக்கும் என்பதை உணர்த்தும் கவிதை வரிகள் இதோ!
மௌனத்தின் விளைவு
மௌனங்கள் பூகம்பத்தின் பேரழிவைக் காட்டிலும் கோரமானது
உலகையே ரணப்படுத்தி சந்ததிகளை சிதைக்கும்
அணுகுண்டை விட அபாயகரமானது
பெரும் விபத்தின் இழப்பை விட வலியானது.
கவிஞர் தன் வாழ்வில் நடந்த குழந்தைப் பருவத்து நினைவுகளை எல்லாம் கவிதையாக்கி இருக்கிறார். சொற்கள் நடந்தால் வசனம், சொற்கள் நடனமாடினால் கவிதை.
நகரத்து வாழ்வில் இயந்திரமாகி விட்ட மனிதர்கள் பற்றிய கவிதை இதோ!
எதிர் வீட்டு வீடுகளில் வசித்தாலும்
சின்னதாய்க் கூட புன்னகைப்பதில்லை மனிதர்கள்.
உண்மையிலும் உண்மை நம்மல் பலர் எதிர் வீட்டுக்காரர்களுடன் இப்படித்தான் வாழ்கின்றோம். மனித வாழ்க்கை என்பது வரம். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும்,அன்பு செலுத்தி பிறரை நேசித்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கவிதை உள்ளது.மனிதன், மனிதநேயத்தை மெல்ல மெல்ல மறந்து விடுகிறான் என்பதைச் சுட்டும் கவிதை!
இல்லம் தேடி வரும் மனிதர்களை வரவேற்றுப் பேச
முடிவதில்லை நேசமாய்
பசித்த முகத்தோடு கையேந்தும் கிழவிக்கு
காசு போட மனமிரங்க முடிவதில்லை பலசமயம்
இயலாமையோடு பேருந்து ஏறும் சிலருக்கு
இருக்கையை பகிர்ந்து கொள்ள இடம் தருவதில்லை மனசு
சாலை விபத்தில் சிக்கியவருக்கு
நின்று உதவிட முடிவதில்லை எப்போதும்
குப்பை விஷயங்களை கோபுரமாக்கிக் கொண்டாடுகிறது
பொய்மை வாழ்க்கை
இக்கவிதையில் கடைசி வரியின் முடிப்பு முத்தாய்ப்பு. தொல்லைக்காட்சியாகி விட்ட,தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே,வந்தாரை வரவேற்று மகிழும் உயர்ந்த தமிழ்ப் பண்பாட்டை தொலைத்து விட்ட அவலத்தை உணர்த்தி மனிதநேயம் விதைக்கிறார்.கவிதைகளில் பேருந்து நடத்துனர் பணி மிகவும் சிரமமான ஒன்று. அதைக் கூட விட்டு வைக்காமல் கவிதையில் பதிவு செய்துள்ளார்.
அம்மாவை காப்பகத்தில் சேர்த்து விட்டு வந்து, வீட்டில் அம்மா சமைத்த உணவு சுவையாக இருக்கும் என்று வாய் அளக்கும் பலரின் கன்னத்தில் அறைவது போன்ற கவிதை உள்ளது. இன்றைய நவீன வாழ்வில் உள்ள முரண்பாடுகளை உணர்வுப் ப+ர்வமாக எளிய சொற்களால் இனிமையாக புதுக்கவிதை வடித்துள்ளார். கவிதைகளுக்கான நவீன ஓவியங்கள் கவிதையின் தரத்தை மேலும் உயர்த்திட துணை நிற்கின்றது. ஓவியர் மதியழகன் சுப்பையா அவர்களுக்கு பாராட்டுக்கள்!
ஏழை வீடுகளில் குழந்தைகள் அடம் பிடித்து மண் உண்டியல் வாங்குவது வழக்கம். ஆனால் குடும்பப் பொருளாதார வறுமை காரணமாக அந்த உண்டியல் நிறையாது. இதனை உணர்த்தும் கவிதை.
நிறைய கனவுகளோடு
நிறையாத உண்டியலும்
நானும்
சோளத்தட்டையில் சுருட்டு செய்து, சிறுவயதில் பிடித்ததற்காக அடி வாங்கிய அண்ணன். இன்று தைரியமாக வீட்டிலேயே சிகரெட் பிடிக்கிறார் என்பதை நூலாசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி தம்பியாக இருந்து பாடி உள்ளார்.கடைசி வரியில் முத்திரை பதிக்கிறார்.
இப்பெல்லாம் அண்ணன் வீட்டிலேயே சிகரெட்டு பிடிக்கிறாரு
அம்மா திண்ணையோட இருக்கிறதனாலேயே
பல இல்லங்களில் பெற்றெடுத்த அம்மாவிற்கு இடம் தருவதில்லை. கருவறையில் இடம் தந்தவளுக்கு வீட்டின் ஒரு அறையில் இடம் தராமல்,முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. இன்னும் சில இல்லங்களில் வீட்டுத் திண்ணையைத் தாண்டி உள்ளே வரக்கூட அனுமதிப்பதில்லை என்ற அவலத்தை கவிதையின் மூலம் சுட்டுகிறார்.
மனிதநேயத்தை, பாசத்தை விதைக்கும் விதமாக, உள்ளத்து உணர்வுகளை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்துள்ள கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்திக்குப் பாராட்டுக்கள். பின் அட்டை மின்னல் போல பளிச்,கவிதைகள் நன்று!

நூலின் பெயர் : கழிந்த நிமிஷங்களின் மௌனங்கள்  நூல் ஆசிரியர் : கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்திமதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி
அட்டைப்பட ஓவியம் மிக நன்று. நடவு வெளியீடாக வந்துள்ள இந்நூல் வடிவமைப்பு மின்னல் கலைக்கூடம். நூலாசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தியின் பெயரிலேயே நிலா இருப்பதால், நிலாவைப் போல அழகான கவிதைகளை வடித்து உள்ளார். நிலவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அதுபோல் இந்நூல் கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் சலிக்கவில்லை. நமக்குள் மலரும் நினைவுகளை தோற்றுவிக்கின்றது.
புதுக்கவிதை என்ற பெயரில்,நவீனம் என்ற பெயரில்,புரியாத புதிராக கவிதை எழுதி வருகின்றது ஒரு கூட்டம். அவர்களது கவிதைக்கு கோனார் உரை ஒன்று வெளியிட்டாலே வாசகருக்கு புரியும். ஆனால் இந்நூல் கவிதைகள்,வாசகருக்கு எளிதாக புரிகின்றது. கவிஞர் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை, சந்தித்த மனிதர்களை,உள்ளத்து உணர்வுகளை கவிதையாக்கி உள்ளார்.
நூலின் பெயர் “கழிந்த நிமிடங்களின் மௌனங்கள்” என்று இருந்திருந்தால் இன்னும் இனிமையாகின்றது. இந்த நூலைப் படித்திட கழிந்த நிமிடங்கள் பயனள்ளவையாகின்றது. அது தான் நூலின் வெற்றி. திரு.கே.எம்.நாச்சிமுத்து அவர்களின் அணிந்துரை நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது. புலவர் த.மா.பொன்னுசாமி அவர்களின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது. கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி,தன்னுரையில் குறிப்பிட்டது போல.
இயந்திரத் தனமான வாழ்க்கை சூழலிலிருந்து சற்றே விலகி. இளைப்பாறும் இடம்,இலக்கியம்,கவிதை, எழுத்து, இது தற்கால நிகழ்வு. இந்நூலை படிக்கும் போது கிடைக்கும் இதமே. இலக்கியத்தின் மேன்மையை உணர்த்தும்.
கவிதை எழுத வேண்டுமென்ற முடிவுடன், தனக்குத் தெரிந்த மொழிப் புலமையெல்லாம் பயன்படுத்தி, ஒப்பனைகள் செய்து எழுதவில்லை இவர். தனக்குத் தெரிந்த எளிமையான சொற்களால் மிக எளிமையாக பதிவு செய்துள்ளார். அது தான் நூலின் சிறப்பு. கவிதைகளுக்கு தலைப்பு எதுவும் தராதது வித்தியாசமாக உள்ளது. ரசிக்கும்படி உள்ளது. காதலியின் மௌனம் நமது மனங்களில் எவ்வளவு அதிர்வுகளை உண்டாக்கும் என்பதை உணர்த்தும் கவிதை வரிகள் இதோ!
மௌனத்தின் விளைவு
மௌனங்கள் பூகம்பத்தின் பேரழிவைக் காட்டிலும் கோரமானதுஉலகையே ரணப்படுத்தி சந்ததிகளை சிதைக்கும்அணுகுண்டை விட அபாயகரமானதுபெரும் விபத்தின் இழப்பை விட வலியானது.
கவிஞர் தன் வாழ்வில் நடந்த குழந்தைப் பருவத்து நினைவுகளை எல்லாம் கவிதையாக்கி இருக்கிறார். சொற்கள் நடந்தால் வசனம், சொற்கள் நடனமாடினால் கவிதை.
நகரத்து வாழ்வில் இயந்திரமாகி விட்ட மனிதர்கள் பற்றிய கவிதை இதோ!
எதிர் வீட்டு வீடுகளில் வசித்தாலும்சின்னதாய்க் கூட புன்னகைப்பதில்லை மனிதர்கள்.
உண்மையிலும் உண்மை நம்மல் பலர் எதிர் வீட்டுக்காரர்களுடன் இப்படித்தான் வாழ்கின்றோம். மனித வாழ்க்கை என்பது வரம். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும்,அன்பு செலுத்தி பிறரை நேசித்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கவிதை உள்ளது.மனிதன், மனிதநேயத்தை மெல்ல மெல்ல மறந்து விடுகிறான் என்பதைச் சுட்டும் கவிதை!
இல்லம் தேடி வரும் மனிதர்களை வரவேற்றுப் பேசமுடிவதில்லை நேசமாய்பசித்த முகத்தோடு கையேந்தும் கிழவிக்குகாசு போட மனமிரங்க முடிவதில்லை பலசமயம்இயலாமையோடு பேருந்து ஏறும் சிலருக்கு இருக்கையை பகிர்ந்து கொள்ள இடம் தருவதில்லை மனசுசாலை விபத்தில் சிக்கியவருக்குநின்று உதவிட முடிவதில்லை எப்போதும்குப்பை விஷயங்களை கோபுரமாக்கிக் கொண்டாடுகிறதுபொய்மை வாழ்க்கை
இக்கவிதையில் கடைசி வரியின் முடிப்பு முத்தாய்ப்பு. தொல்லைக்காட்சியாகி விட்ட,தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே,வந்தாரை வரவேற்று மகிழும் உயர்ந்த தமிழ்ப் பண்பாட்டை தொலைத்து விட்ட அவலத்தை உணர்த்தி மனிதநேயம் விதைக்கிறார்.கவிதைகளில் பேருந்து நடத்துனர் பணி மிகவும் சிரமமான ஒன்று. அதைக் கூட விட்டு வைக்காமல் கவிதையில் பதிவு செய்துள்ளார்.
அம்மாவை காப்பகத்தில் சேர்த்து விட்டு வந்து, வீட்டில் அம்மா சமைத்த உணவு சுவையாக இருக்கும் என்று வாய் அளக்கும் பலரின் கன்னத்தில் அறைவது போன்ற கவிதை உள்ளது. இன்றைய நவீன வாழ்வில் உள்ள முரண்பாடுகளை உணர்வுப் ப+ர்வமாக எளிய சொற்களால் இனிமையாக புதுக்கவிதை வடித்துள்ளார். கவிதைகளுக்கான நவீன ஓவியங்கள் கவிதையின் தரத்தை மேலும் உயர்த்திட துணை நிற்கின்றது. ஓவியர் மதியழகன் சுப்பையா அவர்களுக்கு பாராட்டுக்கள்!
ஏழை வீடுகளில் குழந்தைகள் அடம் பிடித்து மண் உண்டியல் வாங்குவது வழக்கம். ஆனால் குடும்பப் பொருளாதார வறுமை காரணமாக அந்த உண்டியல் நிறையாது. இதனை உணர்த்தும் கவிதை.
நிறைய கனவுகளோடுநிறையாத உண்டியலும்நானும்
சோளத்தட்டையில் சுருட்டு செய்து, சிறுவயதில் பிடித்ததற்காக அடி வாங்கிய அண்ணன். இன்று தைரியமாக வீட்டிலேயே சிகரெட் பிடிக்கிறார் என்பதை நூலாசிரியர் கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்தி தம்பியாக இருந்து பாடி உள்ளார்.கடைசி வரியில் முத்திரை பதிக்கிறார்.
இப்பெல்லாம் அண்ணன் வீட்டிலேயே சிகரெட்டு பிடிக்கிறாருஅம்மா திண்ணையோட இருக்கிறதனாலேயே
பல இல்லங்களில் பெற்றெடுத்த அம்மாவிற்கு இடம் தருவதில்லை. கருவறையில் இடம் தந்தவளுக்கு வீட்டின் ஒரு அறையில் இடம் தராமல்,முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. இன்னும் சில இல்லங்களில் வீட்டுத் திண்ணையைத் தாண்டி உள்ளே வரக்கூட அனுமதிப்பதில்லை என்ற அவலத்தை கவிதையின் மூலம் சுட்டுகிறார்.
மனிதநேயத்தை, பாசத்தை விதைக்கும் விதமாக, உள்ளத்து உணர்வுகளை மிகவும் நேர்த்தியாக பதிவு செய்துள்ள கவிஞர் நிலா கிருஷ்ணமூர்த்திக்குப் பாராட்டுக்கள். பின் அட்டை மின்னல் போல பளிச்,கவிதைகள் நன்று!

பதிப்பு : Sunday, February 14th, 2010 at 2:05 pm பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை. மறுமொழி செய்தியோடை : RSS 2.0. உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.

மறுமொழி இடுக

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!
வெளி இணைப்புகள்

பதிப்பகங்கள்

பங்களிப்பாளர் இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • வித்லோகா

புத்தக இணையம்

  • விருபா

குழு இணைப்புகள்

  • கணிமை.காம்
  • தமிழ்.கணிமை

۞இணைக்க!

வெளி இணைப்புகள்
Google

புத்தக சந்தையில் தேடுங்கள்

புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி

புதுச்செய்திகள்

வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names