• TamilBookMarket.com

  • புத்தக மதிப்புரை : உறவில் சலனம்

Nov 13

புத்தக மதிப்புரை : உறவில் சலனம்

  • நூலின் பெயர் :  உறவில் சலனம்
  • நூல் ஆசிரியர் : திரு. எக்ஸ்.பி.ஒய்ட்
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

ஊடகங்களின் தாக்கத்தால்,உலகமயத்தால்,பண்பாட்டுச் சீரழிவால் இன்று நீதிமன்றங்களில் மணமுறிவு வழக்குகள் குவிந்து உள்ளது. உறவில் சலனம் வருவதால்தான் மண முறிவுகள் பெருகுகின்றன. உளவியல் ரீதியாக உறவில் சலனம் வராமல் இருக்க என்ன வழி என்பதை மிகச் சிறப்பாக விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர் திரு.எக்ஸ்.பி.ஒய்ட். Read the rest of this entry »

பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

Nov 10

மதுரையில் தன் முன்னேற்ற பயிலரங்கம்.

முத்தமிழ் அறக்கட்டளை, சிபி தன்னம்பிக்கை பயிற்சி மையம் மற்றும் கவிமலர்.காம் இணைந்து வழங்கும்

“தன் முன்னேற்ற பயிலரங்கம்.”

"தன் முன்னேற்ற பயிலரங்கம்."

" அழைப்பிதழ்."

  • “வாழ்வை சுவைத்து பார்” பயிற்சியாளர் : கவிஞர். வி.குழந்தைராஜ்
  • “ஏழாவது அறிவு தன்னம்பிக்கை” என்ற தலைப்பில் 24 வரி தன்னம்பிக்கை கவிதைகள்
  • “தன்னம்பிக்கை” வாசகர் வட்ட கூட்டம்

நாள் : ஞாயிறு 15-11-2009

நேரம் : காலை 10.00 மணி

இடம் : சிபி தன்னம்பிக்கை பயிற்சி மையம்

42/20 , மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர் ,

தபால் தந்தி நகர் சாலை,

பிரம்மகுமாரிகள் ஆசிரமம் எதிரில்.

மதுரை-17

பகுப்பு: நிகழ்வுகள் | 0 மறுமொழிகள்

Nov 10

புத்தக மதிப்புரை : Feathered Festoons ( ஹைக்கூ மொழிபெயர்ப்பு )

  • நூலின் பெயர் :  Feathered Festoons ( ஹைக்கூ மொழிபெயர்ப்பு )
  • நூல் ஆசிரியர் : ஹைக்கூ கவிஞர் கவிமுகில் (ஆங்கிலத்தில் பேராசிரியர் இராம.குருநாதன்)
  • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
  • தேமதுரத்தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்ய வேண்டும் என்ற மகாகவி பாரதியின் ஆசையை பூர்த்தி செய்து வந்துள்ள இனிய நூல். புகழ் பெற்ற ஹைக்கூ கவிதைகளை எழுதுவதில் வல்லவர் கவிஞர் கவிமுகில். இவர் ஒரு சகலகலா வல்லவர் மரபும் தெரியும் புதுக்கவிதையும் தெரியும் ஹைக்கூ வரும் கவிதையும் எழுதவரும் திரைப்படப்பாடலும் எழுதுவார் மகிழுந்து நிறுவனத்தையும் சிங்காரச் சென்னையில் திறம்பட நடத்துபவர். பன்முக ஆற்றலாளர் இவர். தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அந்நியர்களும் அறிந்து கொள்ளும் அற்புதமாக வடிவமைத்து இருக்கிறார்கள். Read the rest of this entry »

    பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 1 மறுமொழி

    Nov 05

    புத்தக மதிப்புரை : காகிதப்பூவில் தேன் துளிகள்

    காகிதப்பூவில் தேன் துளிகள் (நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி)
    நூல் ஆசிரியர் -கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன்
    நூல் விமர்சனம் -கவிஞர் இரா.இரவி
    நூலின் முகப்பு அட்டை நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் அழகிய வடிவமைப்பு. படைப்பாளியை காயப்படுத்தாமல் மயிலிறகால்
    வருடுவது போன்ற விமர்சனம் செய்யக்கூடிய மிகச்சிறந்த மனிதர். சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு உதவிய அமரர்.திரு.வல்லிக்கண்ணன் அணிந்துரை நூலிற்கு
    மகுடமாக உள்ளது. நூல் ஆசிரியர் திரு.சந்திரசேகரன் இனிய நந்தவனம் என்ற மாத இதழின் ஆசிரியர் என்பதால் அச்சில் கூடுதல் கவனம் செலுத்தி மிகவும்
    வித்தியாசமாக படைத்து இருக்கிறார். நூலின் உள்ளே மஞ்சள் வண்ண காகிதம் பயன்படுத்தி அழகுபடுத்தி இருக்கிறார். உலகத் தமிழர் மாமன்ற மாநிலத்துணைப்
    பொதுத் செயலர் புலவர் தியாகசாந்தனின் ஆய்வுரை அமுத உரையாக உள்ளது. நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பூவில் தேன் இருக்கும் உண்மை.
    காகிதப் பூவில் தேன் துளிகள் இருக்குமா? என்ற கேள்வி நமக்குள் உதிக்கின்றது. அதற்கு விடை என்ன தெரியுமா? மரபுக்கவிதை என்ற மலரில் மட்டும் தான் என்ற
    தேன் இருக்கும் என்று புதுக்கவிதை புறக்கணித்து விடாதீர்கள். புதுக்கவிதை என்ற காகிதப்பூவிலும் தேன் துளிகள் உண்டு ரசனையோடு ருசித்துப் பாருங்கள் என்று
    சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளன. புதுக்கவிதைகள் தாத்தா மேத்தா என்பார்கள். மேத்தா தாத்தா என்றால் புதுக்கவிதையின் முப்பாட்டன் திருவள்ளுவர் ஆம்
    2039 ஆண்டுகளுக்கு முன்பே மரபு அல்ல என்று ஏற்றுக் கொள்ள மறுத்த புலவர்களிடையே ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்த புதுக்கவிஞன் திருவள்ளுவர்.
    மாறவே மாறாதா? என்ற முதல் கவிதையிலேயே படிக்கும் வாசகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றார். வரிசையாக மாற்றங்களை பட்டியலிட்டு விட்டு கடைசியாக
    முடிக்கும் முத்திரை வரிகள் இதோ
    மாறவே மாறாதா
    மதங்களாலும் சாதியாலும்
    மூடத்தனத்தாலும்
    முடங்கிக் கிடக்கும்
    இந்த சமூகம்?
    கடைசியாக இருக்கும் அந்த கேள்விக்குறியில் கவிஞரின் கோபம் கொப்பளிக்கின்றது. சாதியால் மதத்தால் மனிதன் என்பதையே மறந்து சிந்திக்காமல் விலங்கென
    மோதி வீழும் விந்தை மனிதர்களின் கன்னத்தில் அரையும் கவிதை.
    கவிதைகள் முழுவதும் மனித நேயத்தை வலியுறுத்துகின்றார்.மூடநம்பிக்கைகளை முற்றாகச் சாடுகின்றார். பகுத்தறிவை விதைக்கின்றார் படைப்பாளியின்
    கடமையை உணர்ந்து மனிதனை நெறிப்படுத்தும், கவிதைப் பண்படுத்தும் கவிதை பண்படுத்தும் கவிதை என பாமாலை தொடுத்துள்ளார். சிசுக்கொலைக்கு
    கண்டனத்தை உரக்கப் பதிவு செய்கிறார்.
    தமிழினத்திற்கு மானமும் அறிவும் கற்பித்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றிய பூமிக்கு வாருங்களய்யா என்ற தலைப்பிலான கவிதையில்
    பொறுக்கித் தின்னத்தான்
    அரசியலுக்கு வருகிறான்
    என்றீர்கள்
    இங்கே
    பொறுக்கித் தின்னதோடு
    நாட்டை
    கூறு போட்டல்லவா
    சிதைக்கிறார்கள்.
    என்று முடிக்கிறார். சுயநல வெறிபிடித்து ஆடும் இன்றைய போலி அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி தரும் உணர்ச்சி மிக்க வைரவரிகள்.
    உனக்குள் நீ என்ற கவிதையில் ஒவ்வொருவருக்குள் இருக்கும் திறமையை உணர்த்தும் விதமாக சிறப்பாக எழுதி உள்ளார். இன்றைய இளைய சமுதாயத்திற்கு
    நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சும் நல்ல கவிதை இதோ
    நம்பிக்கையை மட்டும்
    நங்கூரமாய் வை
    நாளை நீயும்
    களங்கரை விளக்கமாய்
    பிரகாசிப்பாய்
    தீபாவளி என்ற மூடநம்பிக்கைக் கதையை கவிதையால் சாடி பகுத்தறிவு ஊட்டுகின்றார். நூல் முழுவதும் கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன. சிலிர்க்கவும்
    வைக்கின்றன. மானுடம் காப்போம் என்ற கடைசி கவிதை வரை அட்டை முதல் அட்டை வரை கருத்துக் களஞ்சியமாக உள்ளது பாராட்டுக்கள்.
    ஊடகங்களால் குறிப்பாக தமிழக தொலைக்காட்சிகளால் சிதைக்கப்பட்டும், செந்தமிழை இன்னும் சிதையாமல், அழியாமல் காத்து வரும் பெருமை ஈழத்தமிழர்களுக்கு
    உண்டு, புலம் பெயர்ந்த வலிமை மிகுந்த வேதனை வாழ்க்கையிலும் தமிழருக்காக இணையத்தளங்கள், தொடங்கி தமிழை உலக அளவில் பறைசாற்றி வரும்
    பெருமைக்கு உரியவர்கள், ஈழத்தமிழர்கள். இந்நூல் ஆசிரியர் கவிஞர் சந்திரசேகரன் தமிழகத்தில் திருச்சியில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் என்பதால் அவர்
    கவிதைகளில் உணர்ச்சிப் பிழம்பாக உள்ளது.
    • நூலின் பெயர் :  காகிதப்பூவில் தேன் துளிகள்
    • நூல் ஆசிரியர் : கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன்
    • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

    நூலின் முகப்பு அட்டை நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் அழகிய வடிவமைப்பு. படைப்பாளியை காயப்படுத்தாமல் மயிலிறகால் வருடுவது போன்ற விமர்சனம் செய்யக்கூடிய மிகச்சிறந்த மனிதர். சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு உதவிய அமரர்.திரு.வல்லிக்கண்ணன் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. நூல் ஆசிரியர் திரு.சந்திரசேகரன் இனிய நந்தவனம் என்ற மாத இதழின் ஆசிரியர் என்பதால் அச்சில் கூடுதல் கவனம் செலுத்தி மிகவும் Read the rest of this entry »

    பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

    Nov 05

    புத்தக மதிப்புரை : சங்கப் பூந்துணர்

    நூலின் பெயர்:சங்கப் பூந்துணர் ,
    நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
    நூல் ஆசிரியர்:தமிழ் மூதறிஞர் தமிழண்ணல்
    தமிழ் செம்மொழியானதற்கும், தமிழ்வழிக் கல்விக்கும் காரணமான தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள், தமிழின் பெருமையையும், தமிழ்ப் பண்பாட்டையும் பறைசாற்றும் வண்ணம் சங்கத்தமிழில் உள்ள அற்புத இலக்கியங்களைத் தொகுத்து அதற்கு நுட்பமான பொழிப்பும் வழங்கி உள்ள அற்புத நூல். 16 பக்கம் தான் நூலில் உள்ளது. ஆனால் தமிழுக்கும் என்றும் வயது 16 என்பதை உலகிற்கு உணர்த்தும் நூல்.
    தொல்காப்பியத்தின் தெய்வ வாழ்த்து தொடங்கி புறநானூறு தமிழர் அறம் வரை தேர்ந்தெடுத்த முத்துக்களைத் தொகுத்து மாலையாக்கி உள்ளார்கள். மனதில் பட்டதை மறைக்காமல் உரைக்கும் துணிவு மிக்கவர் தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள்.
    கவியரசு கண்ணதாசன் முதல் இன்றைய திரைப்படப்பாடல் ஆசிரியர்கள் பலரும் பயன்படுத்தி வரும் புகழ்பெற்ற குறுந்தொகை பாடலும் விளக்கமும் மிகச் சிறப்பு. இந்தப்பாடலை மேற்கோள் காட்டாத இலக்கிய மேடை இல்லை என்று சொல்லுமளவிற்கு புகழ் பெற்ற பாடல் இதோ!
    உலகக் காதலர்
    யாயும் ஞாயும் யார் ஆகியரோ ?
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
    யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
    செம்புலப் பெயல் நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
    குறுந்தொகை 40 – செம்புலப் பெயனீரார்
    என் தாயும், உன் தாயும் யார் யாரோ ? என் தந்தைக்கும் உன் தந்தைக்கும் என்ன உறவு ? நானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்விதம் அறிவோம் ? செம்மண் நிலத்தில் பெய்த வானத்து மழைநீர் ஒன்றானது போல அன்புள்ள நம் நெஞ்சங்களும் ஒன்றாயினவே ! செம்புலபெயனீரார் எழுதிய பாடல் இன்றைய காதலர்களுக்கும் பொருந்தும் வண்ணம் உள்ளது.தமிழ் தவிர பிறமொழி இலக்கியங்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் இருப்பதில்லை.
    புதிய குடும்பம்
    முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
    கழுவுறு களங்கம் கழா அது உடீஇ
    குவளை உன்கண் குய்புப்புகை கழுமத்
    தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
    இனிதுஎனக் கணவன் உண்டலின்
    நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே
    குறுந்தொகை 167 – கூடலூர் கிழார்
    திருமணமான புதிது. அவள் தானாகச் சமைத்துப் பரிமாற விரும்பினாள். காந்தப்பூ விரல்களால் கட்டித்தயிரைப் பிசைந்து, அக்கையைப் பட்டுப்புடவையில் துடைத்தபடியே கையைக் கழுவவோ, உடை மாற்றவோ நினைவின்றிச் சமைக்கிறாள். தாளிதம் செய்யும் போது “குய்” என்று எழுந்த புகை கண்களில் படிந்தது. இவ்வாறு தானாக மிக முயன்று சமைத்த புளிச்சோற்றை அவன் “இனிதாக வுளது” என்று கூறியபடி உண்ணவே அவள் முகம் மெல்லிதாய் மலர்ந்தது.
    குறுந்தொகை பாடலில் சமையலில் பெண்கள் படும் பாட்டையும், சமைத்து முடித்த உணவை உண்ணும் போது பாராட்ட வேண்டும், பாராட்டினால் அவர்கள் முகம் மலரும் என்ற பல செய்திகள் உள்ளது. ஆண்களில் பலர் திருமணமான புதிதில் பாராட்டுவார்கள். நாட்கள் கடந்து விட்டால் பாராட்டுவதில்லை. உளவியல் ரீதியாக பாராட்டு அன்பை வளர்க்கும்.
    புன்னை ஒரு தங்கை
    விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
    மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
    நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப
    நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
    அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
    அம்ம நாணுதும் நும்மோடு நகையே
    விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப
    வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
    துறைகெழு கொண்க நீ நல்கின்
    நறைபடு நிழல் பிறவுமார் உளவே-
    நற்றிணை 172
    புன்னைமர நிழலில் சந்தித்த போது, காதலி காதலனிடம் சொன்னாள், இந்தப் புன்னை எங்கள் தங்கை. அதனால் அம்ம நாணுதும் நும்மோடு நகையே உம்முடன் சிரித்துப் பேச வெட்கமாய் இருக்கிறது. நான் என் தோழியருடன் விளையாடும் போது வெண்மணலில் புன்னை விதையை மறைத்து வைத்து விளையாடினோம். அப்போது நாங்கள் மறந்து விட்டுப் போன புன்னை விதை முளை விட்டுத் துளிர்க்கத் தொடங்கியது. அதுகண்டு எனக்குத் தந்த நெய் கலந்த பாலை அதற்கு ஊற்றி வளர்த்தேன்.
    அதைப் பார்த்த என் தாய், ” உங்களை விட உங்கள் தங்கைப் புன்னை எவ்வளவோ நல்லவள்” என்று அடிக்கடி சொல்வாள். புதிய பாணரின் விளரிப் பண் போல வலம்புரிச் சங்கு நாலும் கடற்கரைத் தலைவ! நீர் விரும்பினால் நாம் சிரித்துப் பேசி மகிழ மணம் கமழும் மர நிழல்கள் பிறவும் பலவுள !
    நற்றிணைப் பாடலைப் படிக்கும் போது புன்னை மரத்தை சொந்தத் தங்கையாகக் கருதி அதுமுன்னே கூடல் வேண்டாம் என்று வெட்கப்படும் உயர்ந்த உள்ளம் உணர முடிகின்றது. மரத்தை தங்கையாகக் கருதிடும் உயர்ந்த குணம் தமிழ் தவிர வேறு மொழியில் காண முடியாது.
    தமிழர் அறம் உலகம் உளதாவது யாரால் ?
    உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
    தமியர் உண்டனும் இலரே; முனிவிலர் ;
    துஞ்சலும் இலர் ; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
    புகழெனின் உயிரும் கொடுக்குவர் ; பழியெனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
    அன்ன மாட்சி அனையர் ஆகித்
    தமக்கு என முயலா நோன்தாள்
    பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
    நூல் : புறநானூறு, பாடியவர் : இளம்பெழுவழுதி அமிழ்தம் கிடைத்தாலும் பிறர்க்குக் கொடுத்தன்றித் தாம் உண்ணார். வெறுப்பும் சோம்பலும் இல்லாதவர். அஞ்சுவதற்கு அஞ்சுபவர். புகழ் என்றால் உயிரையும் கொடுப்பவர். பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் கொள்ளலர். சோர்விலர். அத்தகைய நற்பண்புகள் உடையவராய் தமக்கு மட்டும் என முயலாது பிறர்க்கு எனப் பெருமுயற்சி செய்பவர் இருத்தலால் இவ்வுலகம் என்றும் உளதாகின்றது. இப்படி அருமையாக உரை எழுதி உள்ளார் ஆசிரியர்.

    தமிழர்களின் பண்பை, குணத்தை பறைசாற்றும் தலைசிறந்த பாடல், புகழ்பெற்ற பாடல்களை தொகுத்து பொழிப்புரை வழங்கி உலகின் முதல் மொழியாம் தமிழுக்கும், உலகின் முதல் மனிதன் தமிழனுக்கும் என்றும் அழிவில்லை என்பதை அறுதியிட்டுக் கூறும் நூல். தமிழர்களின் இல்லங்களில்; இருக்க வேண்டிய சிறந்த

    நூல்.

    • நூலின் பெயர் :  சங்கப் பூந்துணர்
    • நூல் ஆசிரியர் : தமிழ் மூதறிஞர் தமிழண்ணல்
    • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

    தமிழ் செம்மொழியானதற்கும், தமிழ்வழிக் கல்விக்கும் காரணமான தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள், தமிழின் பெருமையையும், தமிழ்ப் பண்பாட்டையும் பறைசாற்றும் வண்ணம் சங்கத்தமிழில் உள்ள அற்புத இலக்கியங்களைத் தொகுத்து அதற்கு நுட்பமான பொழிப்பும் வழங்கி உள்ள அற்புத நூல். 16 பக்கம் தான் நூலில் உள்ளது. ஆனால் தமிழுக்கும் என்றும் வயது 16 என்பதை உலகிற்கு உணர்த்தும் நூல்.

    Read the rest of this entry »

    பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

    Nov 05

    புத்தக மதிப்புரை: என்னவள்

    என்னவள் நூல்ஆசிரியர்-(இரா.இரவி) நூல்விமர்சனம்- (முனைவர் ச. சந்திரா)neraimathi@rocketmail.com
    editor wwww.kavimalar.com
    இளைய தலைமுறையினரின் இதயத்தை ஈர்க்கும் இலக்கிய முத்துக்கள்…
    கோபுர வாயில்:
    கவிஞர் இரா.இரவியின் ஐந்தாவது மைல் கல்லான இந்த தொகுப்பு அழகியலும் அன்பியலும் கலந்த அபூர்வ படைப்பு. பாசத்தின் தன்மையை வாசகர்க்கு வலியுறுத்த
    வந்த பாங்கான நூல் எனலாம். ஒன்றைச் சொல்வதன் வழி மற்றொன்றை வலியுறுத்த வந்த உளவியல் சார்ந்த நூல் என்றும் இதனைக் கூறலாம். உடலியல் மறுத்து,
    உலகியல் கூற வந்த உயிரோட்டமான படைப்பு இந்த |என்னவள்|. இயலாமையை மறைமுகமாகச் சொல்லி, இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை
    வரவழைக்கும் மனோதத்துவ நூலை சிறிது புரட்டிப் பார்போமா? புரட்டும் முன்…
    முன் அட்டைப்படம் சொல்லும் செய்தி:
    |உலக மாந்தர்களை அகக்கண் கொண்டு நோக்கும் பொழுது அனைத்தும் நிஜமாகும்! புறக்கண் கொண்டு நோக்கினால் போக்கிரித்தனமே மிஞ்சும்! ஏந்தக் கண்
    கொண்டு பார்த்தாலும் உன்னைக் கண்காணிக்க உன் பின்னால் எவரேனும் இருப்பர்| என்று மணியடித்து எச்சரிக்கின்றது முன் அட்டைப்படம்!
    பின் அட்டைப்படம் சொல்லும் செய்தி:
    ||நீங்களும் நானும் வௌ;வேறு திசைகளில் வெகு தூர இடைவெளியில் இருப்பினும் நம்மிருவரையும் என்றேனும் ஒரு நாள் |கவிதாதேவி| நெருக்கத்திற்கு
    உள்ளாக்குவாள்|| என வித்தக கவிஞரிடம் மெல்லிய குரலில் கவிஞர் இரா.இரவி சொல்வது போல் அமைந்துள்ளது பின் அட்டைப்படம்.
    கைதியா? நீதிபதியா?
    கவிஞர் இரா.இரவியின் “என்னவள்” -எனும் கவிதை தொகுப்பில் நிழல் நிஜமாகின்றது ; நிஜம் நிழலாகின்றது. ஏக்கமும் தாக்கமுமாய், வேண்டுதலும்
    விடைபெறுதலுமாய், அன்பும், பன்புமாய், உயர்ச்சியும், வீழ்ச்சியுமாய், வினாவெழுப்பி விடை கூறி, நினைவுகளோடு வாழ்ந்து கனவுகளோடு கைகோர்த்து உலவுகின்றார்
    கவிஞர். இந்த நூலில் இடம் பெறும் கதாநாயகி கவிதைக்கு கருவாகி, இடையிடையே காந்தமாகி, சில நேரம் ஏணியாக, பல நேரம் வாழ்வெனும் சமுத்திரத்தைக்
    கடக்க உதவும் தோணியாக உருவெடுக்கின்றாள். நாயகனோ – நாயகியின் கட்டளைக்குச் செவி சாய்த்து, சில வேளை நீதிபதியாய், பல வேளை நினைவுச் சிறைக்குள்
    அகப்பட்ட கைதியாய், மனம் இலயித்தும் தொலைத்தும், உருகியும் மருகியும் இறுதியில் எங்கு செல்வது எனத் தெரியாமல், புரியாமல் எழுதுகோலுக்குள் புகந்து
    கவிதை வானில் பயணிக்கத் துவங்கி விடுகிறார். வாசகர்களைச் சிந்திக்க வைத்துவிட்டு, தான் மட்டும் சிறகடித்துப் பறக்க முற்படுகிறார் கவிஞர்.
    கல்வெட்டாய் பதிந்த காவியக் கவிதை: “என்னவளே!
    காதலுக்கும் நட்புக்கும்
    இடைவெளி ஒரு நூல் தான்
    அந்த நூல் அறுந்தால்
    காதலும் மலரலாம்
    நட்பும் முறியலாம்
    நட்பு முறியுமென்றால்
    காதல் வேண்டாம்
    நண்பர்களாகவே இருப்போம்”!
    மனமார…
    அதீத பாசக் கடலில் அமிழ்ந்து கிடைக்கும் இளைய தலைமுறையினர் – வெறுப்பும் விரக்தியும் ஒரு சிறிதும் இல்லாத இந்த “என்னவள்” – நூலை வாசித்து உணரும்
    வேளையில் அவர்களுக்கெல்லாம் உலக உண்மைகள் தெரியவரும் ; உளவியல் புரிய வரும் ; உடலியல் தெளிவு வரும்! வாழ்வை வெல்லும் வல்லமையைப்
    பெருக்கின்ற ஆற்றல் உச்சக்கட்டப் பாசத்திற்கு உண்டு என்ற உயர் தத்துவம் மனதில் புரியும் ! வாழ்வில் இழப்பையும் தவிப்பையும் ஒதுக்கி விட்டு, இதயத்திற்கு
    மரியாதை அளிக்கக் கற்றுதரும் இனிய நூலாம் என்னவளைப் படித்துப் பயன் பெறுங்கள் ! பண்போடு வாழலாம். கவிஞர் இலக்கியப் பயணம் இடைவிடாது கவிதைச்
    சாலையில் பயணிக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்.மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

    இளைய தலைமுறையினரின் இதயத்தை ஈர்க்கும் இலக்கிய முத்துக்கள்…

    கோபுர வாயில்:

    கவிஞர் இரா.இரவியின் ஐந்தாவது மைல் கல்லான இந்த தொகுப்பு அழகியலும் அன்பியலும் கலந்த அபூர்வ படைப்பு. பாசத்தின் தன்மையை வாசகர்க்கு வலியுறுத்த வந்த Read the rest of this entry »

    பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

    Nov 05

    புத்தக மதிப்புரை : மரணம் வரை

    மரணம் வரை – நூல் ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்,நூல் விமர்சனம் : முனைவர் ச.சந்திரா
    ஜனனம் முதல்…(பாட்டிலக்கியம்)
    வாழ்வில் துவங்கி வீழ்வில் நிறைவுறுகின்ற எண்பது பக்க உள்ளடக்கத்தைக் கொண்ட ஏற்றமிகு நூல் இது. கவிஞரின் கன்னி முயற்சி இந்நூல் என வாசிப்போரால்
    யூகிக்க இயலாதபடி சொல்நயமும், பொருள்நயமும், இலக்கணநயழும், தொடைநயழும், நூலில் இழையோடுகின்றது. இருபத்தாறு தலைப்புகளை உள்ளடக்கிய
    இணையற்ற நூலாம் இதனை, தவழும் வயதிலேயே நன்னடை பயிலும் முதிர்ச்சித் தன்மையுடைய முத்திரை நூல் என்றும் கூறலாம்.
    முன் அட்டைப்பட விளக்கம் :
    மனிதச் செடி உயிர் வாழ்தலுக்கானப் பச்சையத்தைத் தயாரித்து தருவதற்கு ~மரணம் வரை| என்ற இந்த நூல் தவறுவதில்லை என்பதை முன் அட்டைப்பட
    விளக்கம் சொல்லாமல் சொல்கின்றது. மூன்று காலங்களையும் மனதில் வைத்து மனித குலம் பயணிக்கின்ற வேளையில் இந்த நூல் கலங்கரை விளக்காக இருந்து
    கரை சேர்க்கும் என்பதனை தலைப்பிற்கு முன்னுள்ள முப்பெரும் புள்ளிகளும் கூறுகின்றது. அவ்வாறு கரை சேர்க்கின்ற பொழுது வாசித்தோர் வாழ்வானது
    கருமையிலிருந்து பசுமைக்கு மாறும் என்று அட்டைப்பட வண்ணம் சொல்கின்றது.
    பின் அட்டைப்பட விளக்கம் :
    கவிஞனின் எதிர்கால முகவரியை ஏற்றமுடன் உரைக்கிறது பின் அட்டைப்படம்.
    வீட்டுப்பற்றை ஓரங்கட்டு!
    நாட்டுப் பற்றில் நலங்காணு!”
    என்று கூறுவது போல் கவிஞர் ஆ.திருநாவுக்கரசன் அவர்களின் புகைப்படம் உள்ளது.
    பருந்துப் பார்வை :
    “மரணம் வரை” – என்ற இந்த நூலில் சருகுகள் உயிர்பெறுகின்றது: ஊர்வன உல்லாச பறவையாகின்றது: பொய்கை புத்திமதி சொல்கின்றது: நாணல் நம்பிக்கை
    ஊட்டுகின்றது: உளி பாறையை நொறுக்குவதோடு மனித நெஞ்சத்தையும் நொறுக்குகின்றது: சாம்பல் துளிர்க்கின்றது: உலோகங்கள் உதிர்க்கின்றன தத்துவமலர்களை!
    களிமண் கற்றுத்தருகின்றது பாடத்தை!. மெல்லிய பஞ்சு “மெத்தனமாய் இராதே” என்கிறது. காந்தம் கவி பாடுகின்றது. கட்டிடத்திற்குள் மறைந்திருக்கும் கம்பி கண்
    சிமிட்டுகிறது. ஆமையோ அடக்கி வாசிக்கின்றது.
    அங்கும் இங்குமாக :
    மரத்தை மனிதன் தரம் தாழ்த்தி நடத்தும் விதத்தினால், மரமும் மனிதனும் கவிஞன் கரங்களில் திணை மாறுகின்றது. டார்வின் குளத்தில் இறங்கி நீச்சலடித்தாரோ
    என்னவோ, இந்நூலை வாசிக்கின்ற அனைவரையும் குளத்தில் இறங்க வைத்து நீச்சலடிக்க வைத்து விடுகின்றார் கவிஞர். கூடவே “வலுவுள்ளது பிழைக்கும் எனும்
    வாழ்கைப் பிடிப்புக் கொள்கையும் கற்றுத் தருகின்றார், நம்மில் தொலைக்காட்சிப் பெட்டியைத் திட்டித் தீர்ப்பவர் பலரிருக்க, அதனை அந்நியப்படுத்தாமல்
    அமுதக்கலசமாய் வர்ணித்த முதல் கவிஞர் இவரே! இல்லறக் கோட்பாடு(ப.59) மற்றும் இல்லற மறுப்புக் கோட்பாடு(ப.77) பற்றிய கவிதை வரிகள் குறியீட்டு
    உத்தியுடன் படைக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதம்.
    நரம்போட்டம் :
    உலகோர் அனைவரும் ஒதுக்கி நிற்க தானே தேடி ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும் வறுமையை, எதிர்த்துக் கேள்வி கேட்கும் கவிஞரின் திறமை அபாரம்! கருவாடு கூட
    மீனாகின்றது கவிஞரின் கவிதையில். அசைவம் பற்றிய கருவாக இருப்பினும் கருத்தெல்லாம் சைவம் தான். முட்டையின் முழுப்பரிமாணத்தை முரண்பாட்டுடன்
    நோக்குகிறார் கவிஞர்.” உன் சந்ததிக்கு வழிவிடும் உன்னதமே மரணம் “(ப.79) என்ற கவிஞரின் மரணத்திற்கான இலக்கணம் மனதில் நிற்கின்றது. “நாங்கூரம்
    பாய்ச்சிய நாவாயாய்’ அங்கேயே நின்று விடுகின்றேன்’(ப.73) எனும் வரிகள் அதீத பாசத்தைப் பிரதிபலிக்கும் அருமையான வரிகள் எனலாம். முப்பாலில் மூன்றாவது
    பாலை விஞ்சுகிறது எழுபத்து நான்காம் பக்க ஏகாந்த மறுப்புக் கவிதை. வாழ்க்கைத் தத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. எதிர்காலக் கோட்பாடு பற்றிக் கூறும்
    காமராசர் கவிதை(ப.37) வண்மைக் கோட்பாடு பற்றிக் கூறும் பொழுதே வண்மை மறுப்புக் கோடபாட்டையும் (ப.71) கூடவே உரைக்கின்றார் நிச்சயமான சொர்க்கம்
    கவிதையில் கவிஞர் �முதியோர் இல்லங்களெல்லாம் மூட வேண்டும்� (ப.24) என்ற கவிஞரின் கட்டளை அரசு கட்டளையையும் தாண்டிய அதிரடி கட்டளையாக
    உள்ளது. ஆசை மறுப்பு கோட்பாட்டிற்கான எதிர் கோட்பாடு(ப.50) இளைய தலைமுறைகளுக்கேற்ற இனிய கோட்பாடு எனலாம். அஃறினை உயிர் வழி உயர்திணைக்கும்
    பாடம் கற்றுக் கொடுக்கிறது ~வாழ்க்கை| கவிதை!(ப.20-21) சமூக இழிநிலையைச் சுட்டிக்காட்டி உள்ளத்து உணர்வுகளை உலுக்குமாறு வார்த்தைகளைப்
    பயன்படுத்துவதில் கவிஞர் வல்லவர் என்பதற்கான சான்று வரிகள் இதோ!
    “படி என்று யார் சொன்னாலும்
    பசி என்று காதில் விழும்”
    (ப.36) புலம் பெயர்ந்தோர் பற்றிய கவிதை (ப.51-55) வாசிப்போர் மனதை விட்டு இடம் பெயராமல் இருக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது.
    முடிக்கும் முன்:
    மனித மனம் பக்குவப்படவும் தடங்கல் இல்லாமல் வாழ்க்கைப் பயணத்தைச் சீராக மேற்கொள்ளவும் இந்த நூல் முழுமையாக உறுதுணை புரியும்!
    “மாற்றம் பெறா மனதில்
    எது விழுந்தால் என்ன
    புது வடிவம் பெறாது”
    எனும் கவிஞரின் எதிர்மறைக் கூற்றைப் பொய்யாக்கும் விதமாக இந்நூலை வாசிப்போர் அனைவரும் நல்மாற்றம் பெறுவர் என்பது உறுதி! இது ~முதலடி| இது
    ~அடுத்த அடி| என என்னுரையில் சொல்லும் அளவிற்கு இல்லாமல் எ
    • நூலின் பெயர் :  மரணம் வரை
    • நூல் ஆசிரியர் : ஆ.திருநாவுக்கரசன்
    • மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா

    ஜனனம் முதல்…(பாட்டிலக்கியம்)

    வாழ்வில் துவங்கி வீழ்வில் நிறைவுறுகின்ற எண்பது பக்க உள்ளடக்கத்தைக் கொண்ட ஏற்றமிகு நூல் இது. கவிஞரின் கன்னி முயற்சி இந்நூல் என வாசிப்போரால் யூகிக்க இயலாதபடி சொல்நயமும், பொருள்நயமும், இலக்கணநயழும், தொடைநயழும், நூலில் இழையோடுகின்றது. இருபத்தாறு தலைப்புகளை உள்ளடக்கிய இணையற்ற நூலாம் இதனை, தவழும் வயதிலேயே நன்னடை பயிலும் முதிர்ச்சித் தன்மையுடைய முத்திரை நூல் என்றும் கூறலாம். Read the rest of this entry »

    பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

    Nov 05

    புத்தக மதிப்புரை : அறிவுக்கோர் ஆவணம்

    அறிவுக்கோர் ஆவணம் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)
    நூல் ஆசிரியர் – பொன்.குலேந்திரன்
    நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி
    “அறிவுக்கோர் ஆவணம்” நூலின் பெயர் மட்டுமல்ல காரணப்பெயர் என்றே கொள்ளலாம். உண்மையிலே அறிவுக்கோர் ஆவணமாக நூல் திகழ்கின்றது. தகவல்
    களஞ்சியமாக ஆவணப்படுத்த வேண்டிய அற்புத நூல். இந்நூலிற்கு பெருங்கவிக்கோ தனது வைர வரிகளால் கவிதையால் வாழ்த்துரை வழங்கி இருப்பது நூலிற்கு
    மேலும் அழகு சேர்க்கின்றன. அறிஞர் சாமி அப்பாத்துரையின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. முத்திரை பதிக்கின்றது.
    இன்றைக்கு உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையதளம் அதிகம் உள்ள மொழி தமிழ் மொழி உலக அரங்கில் இந்தப் புகழை தமிழுக்கு
    தேடித்தந்தவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள். தமிழ் உயர்தனிச் செம்மொழியாக அறிவித்துள்ள நாளில் உலக அளவில்
    இணையத்தின் மூலம் தமிழை உயிர்த்தெழ வைத்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றால் மிகையன்று. உலகில் உள்ள பெரும்பாலான தமிழ் இணையதளங்களை
    இயக்குபவர்கள். நடத்துபவர்கள் இலங்கைத் தமிழர்கள் சொந்த மண்ணில் உரிமைக்கு போராடிக் கொண்டும் இணையம் நடத்துகின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக
    புலம் பெயர்ந்த போதும் மண்ணையும், மொழியையும் மறக்காமல் தமிழ் வளர்க்கும் வல்லுனர்களில் ஒருவர் தான் பொன் குலேந்திரன். இவர் குவியம் என்ற
    இணையத்தின் மூலம் தமிழ் வளர்த்தவர். படைப்பாளியால் சோம்பேறியாக சும்மா இருக்க முடியாது. பொன் குலேந்தின் அவர்கள் மதுரை வரும் செய்தியை
    பெருங்கவிக்கோ தொலைபேசி மூலம் தெரிவித்தவுடனேயே இவருக்கு சிலமணிநேரத்திற்குள் பாராட்டு விழாவை இலக்கியப்பறவைகளின் வேடந்தாங்கலான மதுரை
    நியூ காலேஜ் ஹவுசில் பொன்மனம் படைத்த புரவலர் மணிமொழியனார் முன்னிலையில் ஏற்பாடு செய்தோம். நூல் ஆசிரியர் மனம் மகிழ்ந்தார்கள் சிறந்த உரை
    திகழ்த்தினார்கள். ஆற்றிய உரையில் சிலவற்றை இந்த நூலிலும் சேர்த்து இருக்கிறார்கள்.
    இந்நூலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு பாடநூலாக்கலாம். எந்த நுலிலும் படித்திராத புதிய செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள் குவியம் இணைய இதழில் நான் படித்த
    பல கட்டுரைகளை நூலாகப் படிக்கும் போது பரவசம் அடைந்தேன். நல்ல நடை, எளிய நடை ஆசிரியரின் மொழிப்பற்று,மொழியறிவு நன்கு புலப்படுகின்றது.
    மகாகவி பாரதியார் சொன்ன கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் விதமாக அறிவியல் கருத்துக்களை அழகு தமிழில் எளிதில் புரியும் வண்ணம் அற்புதமாக வடித்து
    இருக்கிறார். கனடாவில் வாழ்ந்த போதும் கண்டியை மறக்காதவர்.
    தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரப்பி வருபவர். இலங்கைப் பரங்கியர் என்ற முதல் கட்டுரையில் தொடங்கி தீக்குளிப்பு என்று முடியும் கட்டுரை வரை 38
    கட்டுரைகளை ஆதாரங்களுடன் ஆணித்தரமாக மறுப்பு யாரும் சொல்ல முடியாத அளவிற்கு வரலாற்று ஆவணமாக சுவடு பதித்து இருக்கிறார் ஆசிரியர். இணைய
    இதழின் ஆசிரியர் என்பதால் கட்டுரை எப்படி? எழுத வேண்டும் என்ற சூத்திரம் அறிந்தவர் என்பதனால் கட்டுரையை மிகச்சிறப்பாக எழுதி உள்ளார். படிக்கின்ற
    ஆர்வத்தை தூண்டும் வண்ணம் மிகச்சிறப்பாக எழுதி உள்ளார். படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி புத்தகம் அல்ல இது. இலங்கையைப் பற்றி தெரியாதவர்கள்
    தெரிந்து கொள்ளவும். தெரிந்தவர்கள் மகிழ்ந்து கொள்ளவும் உதவுகின்ற உன்னத நூல். உலகத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
    இலங்கையில் சிங்களர்தான் பெரும்பான்மையினர் என்று உலகம் நம்பிக் கொண்டு இருக்கிறது.ஆனால் நூலாசிரியர் தமிழர்கள் மற்றும் நிட்டாவோ, பரங்கியர்கள்,
    காப்பிரிகள், பட்டாணியர்கள் இப்படி பல இனத்தவர் நிறைந்து உள்ளதென ஆதாரங்களுடன் எடுத்து இயம்புகின்றார். கொழும்பில் செட்டிமார் கட்டிய கோயில்கள்,
    இப்படி பல தகவல்கள், சிங்கள இனத்தில் மேல்நாட்டு சிங்களவர், கீழ்நாட்டு சிங்களவர் என இரு பகுதிகள் இருப்பதை உணர்த்துகிறார். முத்துக்குளித்தல் செய்து
    முத்து எடுத்தவர்களுக்கு முக்குவர்கள் என்று பெயர் இப்படி இலங்கையில் வாழ்ந்தவர்களின் வரலாற்றை விரிவாக விளக்குகிறார்.
    மனிதனை வைத்து மனிதன் இருக்கும் ரிக்ஷோ என்பது ஏகாதிபத்தியத்தின் சின்னம் என்பதை விளக்கி மனித நேயத்தை பறைசாற்றுகிறார். இலங்கையில் தற்போது
    ரிக்ஷோ மறைந்து விட்டது என்பதை உணர்த்துகிறார்.
    இயற்கையில் உருமறைப்பு என்பது ஏமாற்று வித்தை என்பதை அறிவியல் கருத்துக்களை வாசகர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விளக்குகின்றார். பொதுவாக
    இலங்கைத் தமிழர்களின் தமிழ் இனிக்கு இன்றைக்கு மொழிக் கலப்படமின்றி தமிழைத் தமிழாகவே பேசுவதில் வல்லவர்கள் இலங்கைத் தமிழர்கள். பேசுவதில்
    மட்டுமல்ல பிறமொழி கலப்பின்றி அழக தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதிலும் வல்லவர்கள் நாங்கள் என்பதை பறைசாற்றி உள்ளார். பொன். குலேந்திரன்.
    முதலைக் கண்ணீர் கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆசிரியரின் அறிவியல் விளக்கம் அருமை.
    கொடூர சுனாமியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்தியாவையும், இலங்கையையும் சுனாமி புரட்டிப் போட்டது. துக்கத்தில் ஆழ்த்தியது பலரை
    பலி கொண்டது. சேதங்கள் பல கோடிகளைத் தாண்டியது “கடற்கோள்கள்” கட்டுரையில் புள்ளி விபரங்களுடன் மிக நுட்பமாக விளக்கி உள்ளார். இலங்கை தீவாக
    இருக்கின்ற காரணத்தால் கடல் எளிதில் உட்புகுந்து விடுகின்றது.
    ஐய்ந்தறிவு ஜீவன்கள் என மிருகங்களை நாம் இழிவாக எண்ணுகின்றோம். ஆனால் யாருடைய அறிவிப்பையும் எதிர்பாராமல் தாமாவே மிருகங்களும் பறவைகளும்
    வரப்போகும் பூகம்பத்தை முன்கூட்டியே அறியக்கூடிய அறிவுத்திறன் மிக்கவைகளாக இருப்பதை விளக்குகின்றார் நூலில் கண்டி ராஜ்ஜியம் தமிழ்நாட்டு நாயக்கர்
    வசம் இருந்ததை விளக்குகிறார்.
    ஈழத்தின் பண்டைய துறைமுகங்கள் பற்றி சோழ ஆட்சி பற்றி மாந்தை துறைமுகம் சாம்பு கோவளம் துறைமுகம் பற்றி கட்டுரையில் பதிவு செய்துள்ளார். ஒலி பற்றி
    அனைவரும் அறிவோம். ஒலி பற்றி இத்தனை சிறப்பான விளக்கத்தை இது வரை நான் எந்த நூலிலும் படித்தது இல்லை. ஒலியின் பயனை எடுத்து இயம்புகின்றார்
    மிகவும் ரசனையோடு.
    தந்தை பெரியாராலும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியாலும் ஒழிக்கப்பட்ட தேவதாசி முறையை விளக்கி இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழாக்களில்
    ஆடும் பெண்களை சின்ன மேளம் என்று அழைத்து இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் சின்ன வீடு என் சொல் போல என்பதையும் குறிப்பிடுகிறார். மூட நம்பிக்கைகளை
    சாடுகிறார். பகுத்தறிவை ஊட்டுகிறார். அறியாமையை அழிப்போம் என்ற தலைப்பிட்டு கட்டுரையை முடிக்கிறார். ஒரு படைப்பாளியின் கடமையை செவ்வன
    செய்துள்ளார். சமூகத்தை சீர்படுத்தும் நோக்கம் உள்ளது ஆசிரியருக்கு. தேடல் உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். தேடுலம் பகிர்தலும் கட்டுரை தேடலின்
    விதத்தையும் அவசியத்தையும் விளக்குகின்றது. இணையதளத்தில் உள்ள புகழ்பெற்ற தேடுதளங்களான கூகுள், யாகு, எம்எஸ்என், ஆல்டாவிஸ்டா, ஹாட்பாட்,
    வரிசைப்படுத்தி வாசகர்களுக்கு பயனுள்ள பலதகவல்களை தொகுத்து வழங்கி உள்ளார். ஆசிரியரின் கடின உழைப்பு உணரமுடிகின்றது. சாதித்தீட்டு இருந்ததை
    சாடுகின்றார். யாழ்குடா நாட்டின் பண்டைய கட்டடக்கலையை தமிழ் நாட்டிற்கும், கேரளாவிற்கும் இருந்த தொடர்பு பற்றி கூறுகிறார். கிராமிய வீடுகள் கலை
    அம்சத்துடன் இருந்தது பற்றி விளக்குகிறார். ஆங்கிலக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து வழங்கி உள்ளார்.
    சிங்களர்கள் புத்தரை வணங்கினாலும் புத்தர் சொன்ன ஆசையே அழிவுக்கு காரணம் என்ற பொன்மொழியை உணருவதில்லை. அவர்கள் புத்தரை மட்டுமல்ல
    கண்ணகி, திரௌபதி, மாரியம்மன் போன்ற தெய்வங்களை வணங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்று நூலாசிரியர் பதிவு செய்கிறார். தெய்வங்களை வணங்குவது
    முக்கியமல்ல மனிதனை மதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தால் இலங்கையில் அமைதி நிலவும். இந்த நூல் அறிவுக்கோர் ஆவணம் என்பதில் எள்ளளவும்
    சந்தேகமில்லை வாங்கி படித்துப் பாருங்கள் அறிவை விரிவு செய்யுங்கள்
    • நூலின் பெயர் :  அறிவுக்கோர் ஆவணம்
    • நூல் ஆசிரியர் : பொன்.குலேந்திரன்
    • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

    “அறிவுக்கோர் ஆவணம்” நூலின் பெயர் மட்டுமல்ல காரணப்பெயர் என்றே கொள்ளலாம். உண்மையிலே அறிவுக்கோர் ஆவணமாக நூல் திகழ்கின்றது. தகவல் களஞ்சியமாக ஆவணப்படுத்த வேண்டிய அற்புத நூல். இந்நூலிற்கு பெருங்கவிக்கோ தனது வைர வரிகளால் கவிதையால் வாழ்த்துரை வழங்கி இருப்பது நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அறிஞர் சாமி அப்பாத்துரையின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. முத்திரை பதிக்கின்றது. Read the rest of this entry »

    பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

    Nov 05

    புத்தக மதிப்புரை : விற்பனைக்கு புத்தன்

    விற்பனைக்கு புத்தன் (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)
    editor http://www.kavimalar. com
    நூல் ஆசிரியர் – கவிஞர் ம.ஞானசேகரன்
    நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி
    அட்டைபடமே அற்புதம் நவீன ஒவியத்தின் மூலம் நம்மை வரவேற்கிறது. இவரது ஹைக்கூ கவிதைகளைப் பிரசுரம் செய்து உதவிய அனைத்து சிற்றிதழ்களுக்கும்
    தனது நன்றியை அழகாகப்பதிவு செய்துள்ளார். என்னுரையையும் கவிதை வடிவில் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். “தமிழா நீ பேசுவது தமிழா” என்ற ஒரே வரியின்
    மூலம் உலகத்தமிழர்கள் அனைவரிடமும் அறிமுகமாகிவிட்ட உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அணிந்துரை நூலிற்கு அழகு கூட்டுகின்றது.
    சிறுவயதில் திக்கு வாய் குறை இருந்த பேராசிரியர் பெரியார்தாசன் இன்றைக்கு தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராக உயர்ந்தார்.முயற்சி திருவினையாக்கும்
    என்ற வள்ளுவன் வாக்கை மெய்ப்பித்தவர். அவரது அணித்துரையும் நூலிற்கு மெருகு கூட்டுகின்றன. கவிஞர்கள் வையவன், சீனு தமிழ்மணி, புதுவைத் தமிழ் நெஞ்சன்
    ஆகியோரின் விரிவான அணிந்துரைகள் நூலின் சிறப்பை நன்கு எடுத்து இயம்புகின்றன. ஓவியத்தை பார்க்கின்றனர்.சாலையில் ரசிக்கின்றனர்.ஆனால் உதவிட
    எவருக்கும் மனம் வருவதில்லை.
    ஓட்டிய வயிருடன்
    சாலையில் வரைகிறான்
    தொந்திக் கணபதி
    நாட்டில் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியது “சிந்து சமவெளி நாகரீகம்” நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.புகழ் பெற்ற இந்தச்
    சொல்லில் இரண்டு எழுத்தை மட்டும் மாற்றி மிகச்சிறப்பாக ஹைக்கூவாக்கி இருக்கிறார்.
    குஜராத்
    அயோத்தி
    இந்து சமவெறி நாகரிகம்
    தொல்லைக்காட்சியாகிவிட்ட தொலைக்காட்சிகளில் ராசிக்கல் விளம்பரத்தொல்லை நாம் பார்த்து இருக்கிறோம் மூடப்பழகத்தை சாடிடும் ஹைக்கூ
    விரலில் மாட்டியிருந்தது
    அதிட்டக்கல் மோதிரம்
    துண்டிக்கப்பட்ட கை
    அறிவியல் புயல்,மாமனிதர் அப்துல் கலாம் கூறுகிறா�. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு அறிவியல் கோடி கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள்
    நம்வாழ்வில் தாக்கங்கள் ஏற்படுத்தும் என்பதை நான் நம்பவில்லை” என்கிறார். அதைப்போல் நூலாசிரியர் மூடநம்பிக்கைகளை கடுமையாகச் சாடுகிறார். இன்றைக்கு
    காலத்திற்கேற்ப முற்போக்குக் கருத்துக்களை ஹைக்கூ கவிதைகளில் மிகவும் நூட்பமாக படைத்து உள்ளார். இன்றைக்கும் கோயில்கள் பளிங்குக் கற்களில்
    கட்டுவதையும், இலட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கம், வைரம் ஆபரணங்கள் கோவிலுக்கு வழங்குவதையும் செய்தித்தாளில் பார்க்கிறோம். பட்டினிச் சாவுகள்
    வறுமையின் காரணமாக தற்கொலைகள் இச்செய்திகளையும் படிக்கிறோம்.
    இந்த முரண்பாட்டை விளக்கும் நல்ல ஹைக்கூ
    பாதையில் குடிசை
    பளிங்குக் கோயில்
    பாருக்குள்ளே நல்ல நாடு?
    எதிர்காலம் பற்றி எல்லோருக்கும் உரைக்கும் சோதிடனுக்கு தன்னை தேள் கொட்டப் போகின்றது என்பது கூட தெரியவில்லை, எனவே சோதிடம் என்பது பொய்
    என்பதை எடுத்து இயம்பும் சிறந்த ஹைக்கூ
    தேள் கொட்டியது
    கணியனை
    குறி சொன்ன நேரம்
    இந்த ஹைக்கூவை படிக்கும் போது இன்றைக்கு ஊடகங்களில் சோதிடப் புரட்டை ஊக்குவிக்கும் போக்கு தொடர்வதற்கு கண்டனத்தை பதிவு செய்கிறது.
    புலப்படுகின்றது. பெரிய சோதிடர் என்று மார் தட்டிக் கொள்ளும் எவராவது சுனாமி வரும் என்று முன் கூட்டியே சொன்னார்களா? சொல்லவில்லையே! இதிலிருந்தே
    நாம் அறிந்து கொள்ளலாம். சோதிடர்களுக்கு முன் கூட்டிச் சொல்லும் எந்த சக்தியும் இல்லை என்பதை
    பெண்ணடிமைத்தனத்திற்கு முடிவு கட்டி ஆணாதிக்கத்திற்கு கொட்டு வைக்கும் நுட்பமான ஹைக்கூ
    கண்ணகியா?
    மாதவியா?
    கற்பிழந்தவன் கோவலன்
    சிலகாலம் முன்பு வரை இந்தத் தலைப்பில் பட்டிமன்றங்கள் நடந்ததை நாம் அறிவோம். இந்த பிற்போக்குத்தனமான தலைப்பைச் சாடிடும் ஹைக்கூ இது
    உழைக்கும் மக்களை நாடு அங்கீகரிக்கவில்லை என்பதைச் சாடிடும் ஹைக்கூ
    கல்வெட்டில்
    இல்லை
    உழைத்தவன் பெயர்
    இப்படி நூல் முழுவதும் சிந்தனை மின்னல்களை உருவாக்கும் மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கும், இன உணர்வு ஊட்டும்,
    மிகச்சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தோரணம்,படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் அசைபோட வைக்கும் அற்புதக் ஹைக்கூ கவிதைகளைப் படைத்துள்ள கவிஞர்
    ம.ஞானசேகரனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை அற்புதம்.
    • நூலின் பெயர் :  விற்பனைக்கு புத்தன்
    • நூல் ஆசிரியர் : கவிஞர் ம.ஞானசேகரன்
    • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

    அட்டைபடமே அற்புதம் நவீன ஒவியத்தின் மூலம் நம்மை வரவேற்கிறது. இவரது ஹைக்கூ கவிதைகளைப் பிரசுரம் செய்து உதவிய அனைத்து சிற்றிதழ்களுக்கும் தனது நன்றியை அழகாகப்பதிவு செய்துள்ளார். என்னுரையையும் கவிதை வடிவில் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். “தமிழா நீ பேசுவது தமிழா” என்ற ஒரே வரியின் மூலம் உலகத்தமிழர்கள் அனைவரிடமும் அறிமுகமாகிவிட்ட உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அணிந்துரை நூலிற்கு அழகு கூட்டுகின்றது. Read the rest of this entry »

    பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

    Nov 05

    புத்தக மதிப்புரை : ஆதிக்குடி

    ஆதிக்குடி (நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி)
    நூல் ஆசிரியர் கவிஞர் ம.ஞானசேகரன்
    நூல் விமர்சனம் கவிஞர் இரா.இரவி
    ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. நூலைப் படைத்து இருப்பதே வித்தியாசமாக உள்ளது. நன்றிக்கான புதுவைத் தமிழ்நெஞ்சன் புகைப்படமும் அவருக்கு ஒரு
    ஹைக்கூவும் மிக நன்று. நூலாசிரியர் என்னுரையில் உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை மறக்காமல் பதிவு செய்துள்ளார். இந்த நூலின் ஒட்டுமொத்த
    சாரத்தையும் “எள்ளல்களும் எரிமலை வெடிப்புகளும்” என மூன்றே சொல்லில் விளக்கி உள்ளார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். அவரது அணிந்துரை நூலின்
    மகுடமாக மின்னுகின்றது. அட்டைப்பட புகைப்படமே அற்புதம் குழந்தைகளை நேரடியாக பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. நல்ல வடிவமைப்பு
    நேர்த்தியான அச்சு இன்று ஹைக்கூ பரவலாக எல்லோராலும் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் லிமரைக்கூ வடிவம் தற்போது தான் உணரப்பட்டு பிரபல
    ஹைக்கூ கவிஞர்களும், கன்னிக்கோவில் இராஜா, புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகியோரின் ஊக்கத்தின் பேரில் எழுதி வருகிறார்கள்.சமீபத்தில் தொகுப்பு நூல்
    காக்கைகூடு வந்துள்ளது. ஆனால் ஒரே கவிஞரின் லிமரைக்கூ நூலாக ஆதிக்குடி வந்து இருப்பது கவிஞர் ம.ஞானசேகரன் அவர்களின் திறமையை பறை சாற்றும்
    விதமாக நூல் வந்துள்ளது. முந்தி செயலாற்றுவதில் செயல்வீரராக இருக்கிறார். நூலாசிரியர் பகுத்தறிவாளர் என்பதால் யாருடனும் சமரசம் செய்துகொள்ளாமல்
    மனதில் பட்டதை துணிவுடன் பதிவு செய்து லிமரைக்கூ விருந்து படைத்துள்ளார். புதவைத் தமிழ்நெஞ்சன் சீனு, தமிழ்மணி இவர்களது அணிந்துரை லிமரைக்கூ
    பற்றிய புரிதலை உருவாக்குவதுடன் நூலின் சிறப்பம்சத்தை நன்கு விளக்குகின்றன. விவசாயிகளின் ஏழ்மையை முதல் லிமரைக்கூவிலேயே புலப்படுத்துகின்றார்.
    அடுப்பில் தூங்கும் பூனை
    உழவன் வீட்டில் மிஞ்சியதெல்லாம்
    உடைந்த சோற்றுப் பானை
    நவீனயுகத்திலும் இன்றைக்கும் இரட்டைக்குவளை முறை சில கிராமங்களில் தொடர்வதாக செய்தி படிக்கும் போது நமது நெஞ்சம் குமுறுகின்றது அதுபற்றி ஒரு
    லிமரைக்கூ
    தொடருது மனக் கவலை
    அறுபதாம் ஆண்டு விடுதலை நாளிலும்
    தொங்குது இரட்டைக் குவளை
    நூலில் உள்ள லிமரைக்கூ சிறப்பா? நூலில் உள்ள புகைப்படங்கள் சிறப்பா? என பட்டிமன்றமே நடத்திடலாம் அந்த அளவிற்கு மிகவும் சிறப்பாக உள்ளது. பெண்ணைப்
    போகப் பொருளாக ஊடகங்கள் முழுவதும் சித்தரித்துவரும் காலத்தில் பெண் இனத்திற்காக உரக்கக் குரல் கொடுக்கும் கவிதை
    ஆணுக்கு பெண் நிகர்
    பாலுக்கு ஒரு நீதியுரைக்கு
    மநு மடமை தகர்
    உலகமயம், தாரளமயம், புதிய பொருளாதா மண்டலம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நன்மைச் சுரண்டிட அனுமதித்த அவலநிலையைச் சாடிடும்
    லிமரைக்கூ
    தாராளமயம் செய்த வேø
    நா வறண்டு மாந்தன் சாகும் மண்ணில்
    தண்ணீர் திருடுது ஆலை
    பாரதிக்குப் புகழ் சேர்த்தப் புதுவை மண்ணில் வாழ்வதால், நூலாசிரியர் ம.ஞானசேகரன் கவிதைகளில் வீரியம் உள்ளது. வீரம் உள்ளது. சாடல் உள்ளது, எள்ளல்
    உள்ளது, ஈரம் உள்ளது, மண்வாசம் உள்ளது, எல்லாம் உள்ளது.
    தமிழன் பண்பாட்டுச் சீரிழிவின் காரணமாக தனித்துவமான தனது அடையாளங்களை இழந்து வருவதற்கு தனது வலுவான கண்டனத்தை மிக நுட்பமாக பதிவு
    செய்துள்ளார்.
    நாயின் பேர் பீட்டர்
    தமிழனின் வீட்டில் “அக்ஷை” “அபர்ணா”
    குடிக்க மெட்ரோ வாட்டர்
    இப்படி இந்நூலில் உள்ள லிமரைக்கூவில் எதைக் குறிப்பிடுவது? எதை விடுவது? என்பதே தெரியாத அளவிற்கும் அனைத்தும் சிறப்பாக உள்ளது.
    லிமரைக்கூவை தனி நூலாக கொண்டு வந்த கவிஞரின் முயற்சி பாராட்டுக்குரியது. மற்ற ஹைக்கூ கவிஞர்களும் லிமரைக்கூ தனி நூலாக வெளியிட வேண்டும்
    என்ற ஆர்வத்தை தூண்டும் வண்ணம் முன்னோடியாகப் படைத்து விட்டார்.
    ஒரு தாய் பிரசவத்தின் போது எத்தனை வலிகளைத் தாங்குகின்றாளோ? அத்தகைய வலியினை ஒவ்வொரு நூல் வெளியிடும் போது சில ஆயிரங்களை இழந்து பல
    வலிகளைத் தாங்கித்தான் வளரும் கவிஞர்கள் நூல் வெளியிட்டு வருகிறார்கள். நூல் பற்றிய விமர்சனங்கள் வரும் போது, பாராட்டு வரும் போது வலிகள்
    பறந்துவிடும். மகிழ்ச்சி பிறக்கும்.
    கவிஞர்.ம.ஞானசேகரன் ஆதிக்குடி நூலை மிகச் சிறப்பாக படைத்துள்ளார். பாராட்டுக்கள். முற்போக்கு சிந்தனையுள்ள, சமுதாய அக்கரை உள்ள அனைவரும் விலை
    கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல். இந்நூல் விற்பனை முடிந்த மகிழ்வில் அடுத்த நூலையும் வெளியிட வேண்டும். சமுதாயத்தில் விழிப்புணர்வு
    விதைக்க வேண்டும்
    • நூலின் பெயர் :  ஆதிக்குடி
    • நூல் ஆசிரியர் : கவிஞர் ம.ஞானசேகரன்
    • மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

    ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. நூலைப் படைத்து இருப்பதே வித்தியாசமாக உள்ளது. நன்றிக்கான புதுவைத் தமிழ்நெஞ்சன் புகைப்படமும் அவருக்கு ஒரு ஹைக்கூவும் மிக நன்று. நூலாசிரியர் என்னுரையில் உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை மறக்காமல் பதிவு செய்துள்ளார். Read the rest of this entry »

    பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை | 0 மறுமொழிகள்

    புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!
    • An error has occurred; the feed is probably down. Try again later.
    வெளி இணைப்புகள்

    பதிப்பகங்கள்

    பங்களிப்பாளர் இணைப்புகள்

    புத்தக விற்பனை

    • இந்தியா கிளப்
    • இந்தியாபிளாசா
    • இந்தியாவார்த்தா
    • உடுமலை
    • எனிஇந்தியன்
    • காந்தளகம்
    • சென்னை ஷாப்பிங்
    • வித்லோகா

    புத்தக இணையம்

    • விருபா

    குழு இணைப்புகள்

    • கணிமை.காம்
    • தமிழ்.கணிமை

    ۞இணைக்க!


    வெளி இணைப்புகள்
    Google

    புத்தக சந்தையில் தேடுங்கள்


    புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
    இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
    நன்றி


    புதுச்செய்திகள்


    வருகைப்பதிவு

    tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names