• TamilBookMarket.com

  • புத்தக மதிப்புரை : பாரதிதாசன்


Dec 24

புத்தக மதிப்புரை : பாரதிதாசன்

  • நூலின் பெயர் :பாரதிதாசன்
  • நூல் ஆசிரியர் : திருவேணு சீனிவாசன்
  • மதிப்புரையாளர்: கவிஞர் இரா.இரவி

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரலாற்றை அறிய கையடக்க நூலாக புரொடிஜி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலின் அட்டையில் கம்பீரமான புரட்சிக்கவிஞரின் புகைப்படழும், “தன் உயிரை விடவும்,தமிழை அதிகமாக நேசித்தவர் பாரதிதாசன். ஒரு புரட்சிக்கவிஞரின் புதுமையான வாழ்க்கைக் கதை” என்ற வைர வரிகளும் உள்ளது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் நாள் இரவு 10.15 மணிக்கு புதுச்சேரியில் பிறந்தார் என்ற தகவல் தொடங்கி 1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள் அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார் என்ற செய்தி வரை வரலாற்றை மிக நுட்பமாகவும், சுருக்கமாகவும், ஆழமாகவும் நன்கு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் திரு.வேணு சீனிவாசன். மகாகவி பாரதியைப் போல புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் சிறு வயதிலேயே கவிதை படைக்கும் ஆற்றல் பெற்று இருந்தார் என்ற புதிய செய்தி உள்ளது. புரட்சிக்கவிஞர் பன்னிரண்டாவது வயதிலேயே திருக்குறள் முழுவதும் மனப்பாடமாகத் தெரிந்து வைத்து இருந்தார். அதனால் தான் அவரால் புரட்சிக்கவிஞராக உயர முடிந்தது என்பதை உணர முடிகின்றது.

பாவேந்தர் குடும்பம் பற்றியும் நூலில் அறிய முடிகின்றது. தந்தை கனகசபை, தாயார் லெட்சுமி அம்மாள், மனைவி பழனியம்மாள், நான்கு குழந்தைகள் மூத்த பெண் சரஸ்வதி, இரண்டாவது மகன் கோபதி(இவரே பிற்காலத்தில் மன்னர் மன்னன் என்று பெயர் சூட்டிக் கொண்டார்) மூன்றாவது பெண் வசந்தா, நான்காவது பெண் ரமணி, பாவேந்தர் கண்டிப்பு மிக்க தந்தை. அதே நேரத்தில் கரையில்லாத அன்புக்கடலும் அவரே தான்.

பட்டுக்கோட்டை அழகிரிசாமி வரா,குத்தூசி குருசாமி, ப.சுவானந்தம் என்று பல அறிஞர்கள் புதுச்சேரியில் இருந்த பாவேந்தர் இல்லம் வந்து செல்வார்கள். தாலாட்டுப் பாடலை புதுமையாக படைத்தார்.

சோலை மலரே, சுவர்ணத்தின் வார்ப்படமே
காலையிளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே

என்ற தாலாட்டுப் பாடலை அந்த நொடியே பாடித் தந்தார். மகாகவி பாரதி சந்திப்பு, தந்தை பெரியாருடன் சந்திப்பு, புதிய ஆத்திச்சூடி படைத்தல் இப்படி வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளை சுவைபட தொகுத்து உள்ளார்.

அனைவரும் உறவினர்
ஆட்சியைப் பொதுமை செய்
ஈதல் இன்பம்
இப்படி பல அறிவுரைகளுடன் இருந்தது புதிய ஆத்திச்சூடி.
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே செந்தமிழ்த் தாயே

என்ற பாடலை எழுதினார். இந்தப் பாடல் புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக இன்றும் பாடப்படுகிறது.

இது போன்ற பல்வேறு தகவல்களின் சுரங்கமாக நூல் உள்ளது. பாரதிதாசன் பற்றிய புரிதலை உண்டாக்கும் நல்ல நூல். புரட்சிக்கவிஞரின் அப்பா கனகசபை, இயற்பெயர் சுப்புரத்தினம் – கனக சுப்புரத்தினம் என்று அழைத்தனர். பாரதிதாசன் என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டதற்காக காரணத்தை அவரே சொல்கிறார், இதோ!

“பாரதியாரை நான் ஆதரித்ததும், பாரதிதாசன் என்ற புனைப்பெயர் வைத்துக் கொண்டதும், ஏதோ ஒரு கூட்டத்தாரிடம் நன்மை கிடைக்குமா என்று எதிர்பார்த்து அல்ல. சாதி ஒழிப்பு விளம்பரம் ஆதல் வேண்டும் என்பதற்காகவும், பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு இன்றைக்கும் வேண்டிய கருத்தை வைத்து பாடல் இயற்ற வேண்டும் என்பதை புலவர்க்கு நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவும் தான்”.

இந்நூலை படித்து முடித்த பின்பு தான் எனக்கு பாரதிதாசன் – புனைப்பெயர் காரணம் புரிந்தது. பாரதிதாசன் படைப்புகளின் பட்டியல் உள்ளது. ~~மயிலும், ஸ்ரீ சுப்ரமணியர் துதியமிது|| என்ற படைப்பு பகுத்தறிவாளர் ஆகும் முன்பு படைத்தது. கதர் இராட்டினப் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், சுயமரியாதைச் சுடர், புரட்சிக்கவி, பாரதிதாசன் கவிதைகள் தொகுதி ஒன்று, இரணியன் அல்லது இணையற்ற வீரன், எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு இப்படி காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்து இன்றும் படைப்புகளால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சிக் கவிஞரின் வரலாற்றை பறைசாற்றும் நூல்.

எழுதியபடி வாழ்ந்தவர், அவர் சந்தித்த போராட்டங்கள், எதிர்ப்புகள், கண்டனங்கள், பெற்ற பரிசுகள் என பாவேந்தரின் வாழ்க்கையை பொய்யான புகழ் உரை எதுவும் இன்றி மிகவும் இயல்பான மொழியில் நன்கு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அறியாமையில் உறங்கிக் கிடந்த சமுதாயத்தை தனது கவிதைகள் மூலம் தட்டி எழுப்பிய அறிவுச் சூரியன் பாரதிதாசன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைப் போர் முரசு பாவேந்தர் வரலாறு படித்து முடித்த பின்பும் நம் உள்ளத்தில் வந்து போகிறார். அது தான் இந்த நூலின் வெற்றி.

பதிப்பு : Thursday, December 24th, 2009 at 10:43 pm பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை. மறுமொழி செய்தியோடை : RSS 2.0. உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.

மறுமொழி இடுக

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!

புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


  • விற்க | குறுந்தொகை உரைநெறிகள்
    புத்தகத்தின் பெயர் : குறுந்தொகை உரைநெறிகள் ஆசிரியர் பெயர் : முனைவர் ஆ.மணி விலை :  300 ரூபாய்கள் பகுப்பு : புதிய நூல் | ஆய்வு வெளியீட்டாளர் : தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 9 வெளியீட்டாளர் முகவரி : தமிழன்னை ஆய்வகம், மனை எண் 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதிநகர், அய்யங்குட்டிப்பாளையம், புதுச்சேரி – 605 009, பேசி: 94439 – 27141. வெளியீடு : தமிழன் […]
  • விற்க : நீ முன்னேறிவிட்டாய்
    புத்தகத்தின் பெயர் : நீ முன்னேறிவிட்டாய் ஆசிரியர் பெயர் : திருநகை திருமங்கைதாசன் பதிப்பகம் பெயர் : ஏஒன் பதிப்பகம் (A1 Publication) விலை : Rs.35/- பதிப்பு : 1 ஆண்டு 2011 ISBN எண் : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டார் – இணைய முகவரி : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டாளர் அஞ்சல் முகவரி : குறிப்பிடப்படவில்லை பகுப்பு :                     தமிழ்/புதிய புத்தகம் /வழிகாட்டி […]
  • புத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்
    நூலின் பெயர் :  பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூல் ஆசிரியர் :முனைவர் இரா.மோகன் மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா தோரண வாயில்: வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம் நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்திப்பகுதிகளும் நான்கு. நாம் அறிந்தவரை ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி; சமூக நல இணையர் காந்திஜி கஸ […]
  • புத்தக மதிப்புரை : பொற்றாமரை
    நூலின் பெயர் :  பொற்றாமரை நூல் ஆசிரியர் :முனைவர் அம்பை மணிவண்ணன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி பதிப்பாளர் : எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது . சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று . உ […]
  • புத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை
    நூலின் பெயர் :  ஆகாயத் தாமரை நூல் ஆசிரியர் :மருத்துவர் அ.சீனிவாசன்,MBBS, MD மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில்: விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.’இந்து’மகா சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின் அருள் பாலிக்கும் தீர்த்தமாய்  உருமாற்றி ,வாசிப்போ […]

குழு இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • நூல் உலகம்
  • வித்லோகா

۞இணைக்க!







Google

புதுச்செய்திகள்

வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names