• TamilBookMarket.com

  • புத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ


Aug 21

புத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ

  • நூலின் பெயர் : இதயத்தில் ஹைக்கூ,
  • நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
  • மதிப்புரையாளர் :  கவிஞர் மு.அர்ச்சுனன்

பகட்டு இல்லாத கவிதைகள் காலம் காலமாக மாறிவந்துள்ள தமிழ்க்கவிதை வடிவத்தில் ஒரு
சிறப்பான வடிவம் ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவமான “ஹைக்கூ” வை முதன் முதலில்
அறிமுகம் செய்தவர் சுப்பிரமணிய பாரதியார். பாரதியாரின் புகழ்பெற்ற “அக்கினிக்
குஞ் சொன்று கண்டேன்” என்ற கவிதை ஹைக்கூ மாதிரியான சிறிய வடிவத்தில் எழுதப்பட்ட
கவிதைதான். பாரதிதாசனும் இதேபோன்ற சிறிய வடிவக் கவிதைகளை தனது “அழகின் சிரிப்பு” என்ற நூலில் நிறையவே முயற்சி செய்துள்ளார். அதற்குப் பிறகு இன்று வரை
“ஹைக்கூ” கவிதைகளை எழுதுவதற்கான பல கவிஞர்கள் தமிழில் ஏராளமானோர்
வந்துவிட்டனர். இதில் கவிஞர் இரா.இரவிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.

ஹைக்கூவிற்கு மூன்று வரிகள் வேண்டும். முதல் அடி 5 சீரிலும், இரண்டாவது அடி 7
சீரிலும் மூன்றாவது அடி 5 சீரிலும் அமைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழில்
எழுதப்பட்டுவரும் ஹைக்கூக்கள் இந்த இலக்கண விதிப்படி எழுதப்படவில்லை. மூன்று
வரி என்ற வரையறையை மட்டும் எடுத்துக்கொண்டனர். இரவியின் கவிதைகள் இதே
வரையறையைத்தான் கொண்டுள்ளன.

இரவியின் கவிதைகள் எளிமையாக இருப்பதே. அவர் கவிதை பரவலாக சென்றடைந்ததற்குக்
காரணம்.

தாய் இருக்க சேய் !
சேய் இருக்க தாய் !
சுனாமிக் கொலை.

என்ற கவிதையையும்,

உள்ளுரில் இனவெறி !
வெளிநாட்டில் நிறவெறி
உலக அமைதியே கேள்விக்குறி

என்ற கவிதையையும் உதாரணமாகச் சொல்லலாம். புரியாமல் எழுதினால் தான் கவிதை என்ற
சிந்தனை. இன்று நவீன எழுத்தாளர்கள் பலரிடம் உள்ளது. இந்தத் தாக்கத்திலிருந்து
விடுபட்டவர் ரவி. இவருடைய கவிதைக் களம் சமூகத்தின் நிகழ்காலப் பிரச்சனைகளை
கருவாகக் கொண்டுள்ளது.

இனிக்கவில்லை வாழ்க்கை
கரும்பு நட்டத்தில்
நட்டம்

என்ற விவசாய பிரச்சனைகளைப் பேசும் போதும்,

ஏமாற்றுவேலை
உலக அழகிப்போட்டி
ஓருத்தி மட்டுமா அழகா?

என்று அழகிப்போட்டிகள் அவல நிலை பற்றி எழுதும்போதும் இரவியின் சமூகப்பார்வை
வெளிப்படுகிறது. எளிமையாக எழுதவேண்டும், எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று
நினைத்து எழுதும் ரவியின் கவிதைகள் சில இடங்களில் கவிதை என்ற எல்லையை மீறி
உரைநடையாகவே தோன்றுகிறது. இந்த இலக்கிய விபத்தை இரவி தவிர்க்க வேண்டும்.

மின்சார சிக்கனம்
தேவை இக்கணம்
பகலிலும் எரியும் தெருவிளக்கு

போன்ற கவிதைகளை உதாரணமாகச் சொல்லாம். ஆங்கில வார்த்தை கலக்காமலும், இலக்கியப்
பகட்டு செய்யாமலும் எழுதப்பட்டதற்காக கவிதை வாசகர்கள் இந்நூலைப் படிக்கலாம்.

பதிப்பு : Saturday, August 21st, 2010 at 2:30 pm பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை. மறுமொழி செய்தியோடை : RSS 2.0. உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.

மறுமொழி இடுக

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!

புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


குழு இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • நூல் உலகம்
  • வித்லோகா

۞இணைக்க!







Google

புதுச்செய்திகள்

வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names