இணையத்தில் நூல் விற்பனை
தமிழ் புத்தக சந்தை வாசகர்களுக்கு வணக்கம்,
தமிழ் புத்தக சந்தை , நூல் ஆர்வலர்களின் வசதிக்காக நூல்களை வாங்க மற்றும் விற்க இணைப்பு பாலமாக, வணிக நோக்கமின்றி தொடங்கப்பட்டது. தொடர்ந்து அதே இலக்கில் தமிழ் புத்தக சந்தை தன் பயணத்தை தொடரும்.
அதே நேரத்தில் பல நண்பர்கள் இணைய தளம் மூலம் புத்தகம் வாங்க விருப்பம் தெரிவித்திருந்தார்கள். நேரமின்மை காரணமாக தமிழ் புத்தக சந்தை நேரிடை விற்பனை முயற்சி செய்யவில்லை. ஆயினும் இணைய தளம் மூலம் புத்தகம் வாங்க விரும்பும் தமிழ் புத்தக சந்தை நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்க ஒரு புதிய முயற்சியாக சில முக்கிய நூல் விற்பனையாளர்களின் இணைய தளத்தின் விற்பனை தளங்களை இணைக்க இருக்கிறோம் . முடிந்தவரை தமிழ் நூல்களை பட்டியலிட முயற்சி செய்திருக்கிறோம் இவை தொடர்ந்து மேம்படுத்தப்படும். மேலும் சில தொழில்நுட்ப மேம்பாடுகளையும் செய்ய முனைகிறோம்.
இணைய தளம் மூலம் புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். விற்பனையாளர்கள் தங்கள் இணைய விற்பனை தளங்களை தமிழ் புத்தக சந்தையுடன் இணைக்க விரும்பினால் வரவேற்கிறோம்
தமிழ் புத்தக சந்தை இணைய தளத்தை மேம்படுத்த தொடர்ந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.