• TamilBookMarket.com

  • புத்தக மதிப்புரை : மனதில் ஹைக்கூ


Oct 10

புத்தக மதிப்புரை : மனதில் ஹைக்கூ

  • நூலின் பெயர் : மனதில் ஹைக்கூ
  • நூலின் ஆசிரியர் : இரா.இரவி
  • நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
உலகம் மூன்று ; கணிக்கும் காலம் மூன்று; ;சுவையூட்டும் கனி மூன்று ; உலகப்பொதுமறையின் பால் மூன்று ;அரும்பெருந் தமிழ் மூன்று ; ஆற்றல்சால் வேந்தன் மூன்று என புகழின் உச்சத்தை எட்டிய அனைத்துமே ‘ மூன்று’ எனும் உயரிய எண்ணாக வடிவெடுக்க,அதில் துளிப்பா மட்டும் விதிவிலக்கா என்ன ? மூன்றே வரிகளில் முத்தான கருத்துக்களை வாசகர் மனதிற்குள் புகுத்தும் சக்தி கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு உண்டு என்பதனை நிரூபணம்செய்ய வந்த நூலே ‘மனதில் ஹைக்கூ’
ஆதியோடு அந்தமும் :
கடிகாரம் முதல் கணினி வரை ,பூசணிக்காயிலிருந்து பொக்ரான் வரை ,சம்மட்டி தொடங்கி சந்திராயன் வரை,காந்திதாசன் முதல் கண்ணதாசன் வரை, வாடும் ரோஜாமுதல் வாடாமல்லி வரை,அரேபியா முதல் ஆகாயம் வரை அலசி ஆராய்கிறது 64 பக்கங்களையுடைய மனதில் ஹைக்கூ எனும் அற்புத நூல்.
இதயப்பகுதி :
ஹைக்கூ திலகம் இரா.இரவியின் இந்நூலில் சமூக அத்துமீறல்கள் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கைகளின் ஆணிவேர் கிள்ளி எறியப்படுகின்றது.தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வரைமுறையற்ற ஆதிக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இயற்கை இடையிடையே வந்து நலம்விசாரித்து விட்டு போகின்றது.பாசமும்நேசமும் பாங்காய் பண் பாடுகிறது. தன்னம்பிக்கை ஆங்காங்கேபளிச்சிடுகின்றது.ஒரு சமூக சீர்திருத்தவாதியின் ஒட்டுமொத்த பணியை செய்வதற்கு ‘ ஹைக்கூ’ எனும் அஸ்திரத்தை கவிஞர் இந்நூலில் பயன்படுத்தியுள்ளார
இரத்த ஓட்டம் :
இந்த கவிதை தொகுப்பில் அஞ்சல் பெட்டி அழுகின்றது.தொலைக்காட்சிப்பெட்டி தொற்று நோய் பரப்புகின்றது.கைபேசி கதற வைக்கின்றது.அல்லி கூம்புகின்றது.பட்டாசு பற்றி வெடிக்கின்றது.பாம்பு இரை தேடுகின்றது.குப்பை கூட தத்துவம் பேசிச்செல்கின்றது.மொத்தத்தில் கற்கால கோடாரி முதல் தற்கால கணினி வரை கருவாக உருமாற்றியிருக்கிறார் கவிஞர்.
நவரத்தின குவியல் :
பழமொழியை காலத்திற்கு ஏற்றாற் போல் புதுமொழியாக மாற்றுவது என்பது கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு கை வந்த கலை.
குஞ்சுகள் மிதித்து
கோழிகளுக்கு காயம்
முதியோர் இல்லம்.
நகைச்சுவை கவிதை :
மேலிருந்து குதித்தான்
மரணம் இல்லை
நீச்சல் குளம்.
‘நச்’-என்று ஒரு கவிதை:
பாஸ் மார்க் வாங்கியும்
கிளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக் .
இளைஞர்களுக்கு ஓர் இலவசக்கவிதை :
மூளைப்புற்று நோய்
முற்றிலும் இலவசம்
செல்பேசியுடன் !
சொல் விளையாடல் கவிதை :
காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி.
சமூகத்தை படம்பிடித்து காட்டும் கவிதை :
உலகெல்லாம் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்.
மனதார …
ஒன்பதாவது மைல்கல்லை எட்டி, ஹைக்கூ இலக்கிய உலகிற்கு ‘மனதில் ஹைக்கூ’ எனும் ஒப்பற்ற நூலை வழங்கியிருக்கும் கவி சூரியன் இரா.இரவியின் பெயரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுவதும் ஒலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிப்பு : Sunday, October 10th, 2010 at 12:22 pm பகுப்பு: புத்தக மதிப்புரை. மறுமொழி செய்தியோடை : RSS 2.0. உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.

*ஒரு கருத்து - “புத்தக மதிப்புரை : மனதில் ஹைக்கூ”

  1. 1 On November 18th, 2010, balan k said:

    Both R. Ravi and Dr. Chandra are not aware about Haigu. They tought anything written in three lines can be called as Haigu. Especially Mr. R. Ravi doesn’t have poetic sense and even basics of Tamil Grammer. These people priacing each other and doing cheap popularity to build their images.

மறுமொழி இடுக

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!

புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


  • விற்க | குறுந்தொகை உரைநெறிகள்
    புத்தகத்தின் பெயர் : குறுந்தொகை உரைநெறிகள் ஆசிரியர் பெயர் : முனைவர் ஆ.மணி விலை :  300 ரூபாய்கள் பகுப்பு : புதிய நூல் | ஆய்வு வெளியீட்டாளர் : தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 9 வெளியீட்டாளர் முகவரி : தமிழன்னை ஆய்வகம், மனை எண் 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதிநகர், அய்யங்குட்டிப்பாளையம், புதுச்சேரி – 605 009, பேசி: 94439 – 27141. வெளியீடு : தமிழன் […]
  • விற்க : நீ முன்னேறிவிட்டாய்
    புத்தகத்தின் பெயர் : நீ முன்னேறிவிட்டாய் ஆசிரியர் பெயர் : திருநகை திருமங்கைதாசன் பதிப்பகம் பெயர் : ஏஒன் பதிப்பகம் (A1 Publication) விலை : Rs.35/- பதிப்பு : 1 ஆண்டு 2011 ISBN எண் : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டார் – இணைய முகவரி : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டாளர் அஞ்சல் முகவரி : குறிப்பிடப்படவில்லை பகுப்பு :                     தமிழ்/புதிய புத்தகம் /வழிகாட்டி […]
  • புத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்
    நூலின் பெயர் :  பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூல் ஆசிரியர் :முனைவர் இரா.மோகன் மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா தோரண வாயில்: வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம் நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்திப்பகுதிகளும் நான்கு. நாம் அறிந்தவரை ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி; சமூக நல இணையர் காந்திஜி கஸ […]
  • புத்தக மதிப்புரை : பொற்றாமரை
    நூலின் பெயர் :  பொற்றாமரை நூல் ஆசிரியர் :முனைவர் அம்பை மணிவண்ணன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி பதிப்பாளர் : எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது . சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று . உ […]
  • புத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை
    நூலின் பெயர் :  ஆகாயத் தாமரை நூல் ஆசிரியர் :மருத்துவர் அ.சீனிவாசன்,MBBS, MD மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில்: விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.’இந்து’மகா சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின் அருள் பாலிக்கும் தீர்த்தமாய்  உருமாற்றி ,வாசிப்போ […]

குழு இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • நூல் உலகம்
  • வித்லோகா

۞இணைக்க!







Google

புதுச்செய்திகள்

வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names