இணையம் இன்றைய இளைஞர்களின் கைப்புத்தகமாக மாறி விட்டது. தனக்குத் தேவையான எந்த விவரத்தையும் அவர்கள் அலைந்து திரியாமல் யாரிடமும் விசாரிக்காமல் அதிகம் சிரமப்படாமல் இணையத்தில் தேடிப்பெற முடிகிறது.
அறிவுலகம் சார்ந்த விஷயங்களைத் தேடும்போது புத்தகங்களைத் தேடாமல் இருக்க முடியாது. இன்னும் கூட புத்தகங்களுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. பலவிதமான தேவைகளுக்கு புத்தகங்கள் நமக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன. எனவே புத்தகங்களைத் தேடுவது நமது அவசியங்களில் ஒன்று.
எந்தத் தகவலையும் இணையத்தின் மூலம் பெற முடியும்போது தமிழில் வெளியாகும் நூல்கள் பற்றிய விவரங்களையும் மக்கள் இணையத்தில் பெற விரும்புவது இயற்கை. இணையத்திலேயே பல புத்தக நிறுவனங்கள் கடைவிரித்துள்ளன. பதிப்பகங்கள் தங்கள் இணைய தளங்களில் புத்தகப் பட்டியலை வெளியிட்டுள்ளன. வீட்டில் இருந்தே இணையத்தில் ஆர்டர் செய்து புத்தகங்களை இப்போது வாங்க முடியும்.
இது ஒரு புறம் இருக்க எத்தனையோ புத்தகங்கள் முதற்பதிப்போடு நின்று போயிருக்கக் கூடும். அவற்றில் வெளியில் அறியப்படாத பழைய அரிய நூல்களும் உண்டு. பலருக்கும் அந்தப் புத்தகங்கள் இப்போது தேவைப்படலாம். ஆனால் விற்பனை நிலையங்களில் அவை இல்லை. வெளியிட்ட பதிப்பகங்களிலும் இருக்காது. பல பதிப்பகங்கள் இன்று காணாமல் போயிருக்கலாம்.
ஆனால் அந்தப் புத்தகங்கள் அன்று வாங்கிய வாசகரிடம் இருக்கலாம். காலச்சுழற்சியில் அவருக்கு அது இன்று பயன்படாமல் பரணில் கூட தூக்கிப் போட்டிருக்கலாம்.
பலர் சேகரித்த புத்தகங்களை பாதுகாக்க வழியின்றி அவற்றை யாருக்காவது விறக விரும்பலாம். அல்லது நூலகங்களுக்கோ ஆர்வலர்களுக்கோ இலவசமாகவே வழங்க விரும்பலாம்.
தங்கள் படைப்புக்களை தாங்களே புத்தகமாக வெளியிட்ட பல படைப்பாளிகள் அவற்றை விற்க தொடர்பாளர்களைத் தேடலாம்.
ஆராய்ச்சிக்காக அல்லது ஆர்வம் காரணமாக ஒரு பழைய புத்தகம் அல்லது பல புத்தகங்கள் ஒருவருக்குத் தேவைப்படலாம். அவற்றை வைத்திருப்பவர்களிடம் இருந்து பெற அவர் வழி தேடலாம்.
இப்படிப் புத்தகம் வாங்க விரும்புவோர், விற்க விரும்புவோர், பழைய புதிய புத்தகங்கள் பற்றிய விவரம், பதிப்பகங்களின் விளம்பரங்கள், படைப்பாளர்களின் புத்தக விவரம் போன்றவற்றை பங்கிட்டுக் கொள்ள இந்த புத்தகச் சந்தை இணையவெளியில் இயங்க வருகிறது.
இங்கே படைப்பாளர்கள் , பதிப்பகத்தார் தங்கள் வெளியீடுகள் குறித்த விவரங்களை விளம்பரப் படுத்தலாம். பழைய புத்தக சேகரிப்புகளை விற்க விரும்புவோரும் விளம்பரப் படுத்தலாம். புத்தகம் தேவைப்படுவோரும் தங்கள் தேவை குறித்து இங்கே அறிவிக்கலாம்.
வாங்க: இந்தப் பகுதியில் புத்தகம் தேவைப்படும் வாசகரின் விருப்பங்கள் பட்டியலிடப் படும். புத்தகங்களை வைத்திருப்போர் அல்லது பதிப்பகத்தார் தங்கள் மறுமொழி மூலம் புத்தகம் விற்பது பற்றி தெரிவிக்கலாம்.
விற்க: இந்தப் பகுதியில் தங்களிடம் உள்ள புத்தகங்களை விறபனை செய்ய விரும்புவது பற்றி அறிவிக்கப் படும் தகவல்கள் பட்டியலிடப் படும். பதிப்பகத்தார், புத்தக விற்பனையாளர்கள் குறிப்பிட்ட சில புத்தகங்கள் பற்றி விளம்பரப் படுத்தலாம். தங்கள் சொந்தப் படைப்பை நேரடியாக பதிப்பித்தவர்கள் இங்கே அறிவிக்கலாம், பழைய புத்தங்களை வைத்திருப்போர் விற்க அறிவிக்கலாம்.
பதிப்பகம்: பகுதியில் தமிழ்ப் புத்தக வெளியிட்டாளர்கள் தங்கள் விளம்பர பேனர் அல்லது புத்தகப் பட்டியலை விளம்பரப் படுத்தலாம்.
மதிப்புரை: பகுதியில் இதழ்களில் வெளியான புத்தக விமர்சனங்கள் தொகுக்கப் படும்.
வெளியீடு: பகுதியில் புத்தக வெளியீட்டு விழாக்கள் தொடர்பான அறிவித்தல்கள், செய்திகள் தொகுக்கப் படும்.
விளம்பரம்: பகுதியில் தமிழ்ப் புத்தகச் சந்தை இணையதளத்தில் விளம்பரம் செய்ய விரும்பும் பிற நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெறும்.
வாங்க! அறிவிப்பு விளம்பரங்கள் வெளியிடப் பட்டுள்ள பக்கத்தில் மறுமொழிகள் பகுதியில் அந்தப் புத்தகம் விற்க தயாராக உள்ளவர்கள் பதில் தரலாம்
விற்க! பகுதியில் அறிவிக்கப் பட்டுள்ள புத்தகங்களை வாங்க விரும்புவோரும் மறுமொழிகள் பக்கத்தில் தகவல் தரலாம்.
பதிப்பகங்கள், புத்தக வெளியிட்டாளர்களின் புதிய புத்தகங்கள் முதல் தனிநபர்கள், படைப்பாளிகளின் பழைய புத்தகங்கள் வரை அனைத்தையும் வாங்க உதவும் வகையில் இந்த தளம் வாசக-படைப்பாளி-விற்பனையாளர் இடையே ஒரு பாலமாக இருக்கும்.
தேவையான பங்களிப்புகள் தந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
இந்த தளம் பற்றிய உங்கள் கருத்துகள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்.