• TamilBookMarket.com

  • புத்தக மதிப்புரை : கல்லூரி அதிசயங்கள்


Aug 29

புத்தக மதிப்புரை : கல்லூரி அதிசயங்கள்

  • நூலின் பெயர் : கல்லூரி அதிசயங்கள்
  • நூல் ஆசிரியர் : கலைமாமணி கு.ஞானசம்மந்தன்
  • மதிப்புரையாளர் :  கவிஞர் பொன் பால சுந்தரம் இலண்டன்

“உலகத் தமிழர் இணைப்புப்பாலம்” நண்பர் கவிஞர் இரா இரவி அவர்கள் அனுப்பிவைத்த தங்கள் அரிய படைப்பான “கல்லூரி அதிசயங்கள்” கிடைத்தது. ஒரே அமர்வில் படித்தேன் ரசித்தேன். மகிழ்ந்தேன். என் மனம் நிறைவான பாராட்டுக்கள்.

தங்கள் பணி ஆல் போல் பரந்து வளரட்டும் அறுகு போல் தமிழ் உள்ளங்களில் படரட்டும். தங்கள் அறிவை வாசகர்களுடன் உறவாட வைத்திருக்கிறீர்கள். இன்று சிரிப்பு மருத்துவமாக கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தாங்கள் மனங்களைக் குணப்படுத்தும் ஒரு “சமூக மருத்துவர்” இலக்கியத்தை ரசிக்க வைக்கும் ஒரு இலக்கியவாதி. கல்விப் பயிர்களை வளர்க்கும் மனோ தத்துவவாதி.

தங்கள் இல்லத்து விருந்தோம்பல் பண்புக்கு “பார்த்ததும்… இரசித்ததும்!” ஒரு முத்தாரம். காலைத் தேனீரலீருந்து பகற்போஜனத்துடன் களை தீர்த்து, மாலையில் சூடான காப்பியும், இராப்போஜனமும் அத்துடன் பாலும் இன்று கிடைக்கும் ஒரே இல்லம் உங்கள் இல்லம்தான் முனைவரே! கொடுத்தார்க்குக் குறைவில்லை என்பதை அறிந்துள்ள தங்கள் இல்லத்தரசிக்கு நன்றி (அடுத்து நான் மதுரை வரும்போது தங்கள் இல்லத்தில் விருந்துக்கு வருகிறேன்)

குரங்குகளே தங்கள் சுவராஸ்யமான பேச்சை குரங்குச் சேட்டை பண்ணாமல் கேட்டு ரசித்து மகிழ்ந்ததை இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் மனதில் பதிக்கட்டும் என நாசூக்காகத் தாங்கள் சொல்லி வைத்திருக்கிறீர்கள். தங்கள் பேச்சாற்றலில் ஒவ்வொன்றையும் கிரகித்துப் பயன் பெறவேண்டியது தங்கள் பேச்சுக்களைக் கேட்பவர் கடமையாகும்.

“என்றென்றும் கமல்”என்னும் கட்டுரையில் அல்லிக்கொடி பற்றி கமல் அவர்கள் அறிய ஆவல் கொண்டிருந்ததைக் கூறியுள்ளீர்கள்.

தாமரை, அல்லி, ஆம்பல் ஆகியவைகள் கொடி இனத்தைச் சேர்ந்தவை. இவைகள் மரங்களின் வர்க்கத்தில் இல்லாதவை. இவற்றில் தாமரைச்செடி கெட்டியான தண்டினை உடையதாகவும், தாமரைப் பூவின் தண்டும் கெட்டியானதாகவும் இருக்கும், அல்லி, ஆம்பல் இரண்டும் அப்படி அல்ல. இதன் கொடி மெதுவானது. இலகுவாக வளையக் கூடியது. அதனால்தான் மெலிவான பெண்களை “அல்லிக்கொடி” எனவும், “அல்லி இடையாள்” எனவும் கிராமியப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அதனால்தான் இப்படியான உவமை வந்துள்ளது. (தாவரவியலில் இவை கொடி வர்க்கத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்பட்டிருப்பதாகவும் அறிகிறேன் )

“மதுரைத் தலங்களும் தேவாரங்களும்” – அறிவும், ஆன்மீகமும், பழமையும், பெருமையும், நிறைந்த ஒன்று. மதுரைக்கு அன்று பெருமை தந்த திருஞானசம்பந்தரைப் பற்றி மதுரைக்கு இன்று பெருமைதரும் “குரு” (ஆசான்) ஞானசம்பந்தன் கருத்தாளமிக்க படைப்பை முன்வைத்திருக்கிறார். மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்கு வகை பகிர்ந்த திருஞானசம்பந்தர். அடிச்சுவட்டில் வடிக்கப்பட்ட கருந்தாளமிக்க கட்டுரை படித்துப் பலன்பெற வேண்டியது நமது கடமையாகும்.

“பைய” என்னும் சொல் மதுரைக்கு உரியதென முனைவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஞானசம்பந்தர் அவர்களே பாடிய “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” பாடலில் இருந்து வந்த சொல் இது எனவும் ஆதாரம் கொடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்கதே.

ஆனால் இந்த “பைய” என்ற சொல் ஈழநாட்டில் யாழ்பாணப் பகுதியில் பேச்சவழக்கில் இன்றும் இருப்பதைக் காணலாம். வேகமாக வரவேண்டிய ஒருவன் மெதுவாக வருவானால் அவனைப் பார்த்து “பையப்பைய வாறியேடா” எனத் திட்டுவார்கள்.

ஈழம்வாழ் தமிழர்களுக்கும் தமிழ்நாடு வாழ் தமிழருக்கும் இடையிலான தொடர்பு திருஞானசம்பந்தர் காலத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்றென்பதும் புலனாகிறது. சமயகுரவர்கள் பாடிய தேவாரங்கள் இன்றும் இல்லங்களிலும், ஆலயங்களிலும், விழாக்களிலும் ஒலித்துக் கொண்டிருப்பதற்கு இந்தத் தொடர்பும் சான்றாகும்.

“கல்லூரி அதியசங்களில்” நவமணிகள் உள்ளன. நவதானியங்களும் உள்ளன. நவமணிகளினால் பலன் பெற விரும்புவோர் அதன் பலனைப் பெற்று வாழ்வார்களாக! ஞானசம்பந்தன் அவர்கள் முனைவராக இருப்பதனால் மாணவர் சமுதாயத்தைக் கருத்தில் கொண்டு நவதானியங்களை விதைத்திருக்கிறார். அறுவடை செய்ய வேண்டியவர்கள் மாணவர்களே. இதுவே ஞானசம்பந்தன் அவர்களது இதய தாகம்.

பதிப்பு : Sunday, August 29th, 2010 at 2:45 pm பகுப்பு: புத்தக சந்தை, புத்தக மதிப்புரை. மறுமொழி செய்தியோடை : RSS 2.0. உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.

மறுமொழி இடுக

புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி!

புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு!
இங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.
நன்றி


குழு இணைப்புகள்

புத்தக விற்பனை

  • இந்தியா கிளப்
  • இந்தியாபிளாசா
  • இந்தியாவார்த்தா
  • உடுமலை
  • எனிஇந்தியன்
  • காந்தளகம்
  • சென்னை ஷாப்பிங்
  • நூல் உலகம்
  • வித்லோகா

۞இணைக்க!







Google

புதுச்செய்திகள்

வருகைப்பதிவு

tamilbookmarket, tamilbook, tamilbooks, tamilsbook, tamilnool, tamil, book, books, language, advertisement, publishers, publication, bookseller, booksellers, ebook, ebooks, story, poem, fiction, novel, non-fiction, nool, thamizh, tamiz, thamiz, bookstore, bookfair, chennai, tamilnadu, india, tamil unicode, internet, web, emagazine, ezine, literature, culture, etamil, etext, media, writings, writers, pen power, index, india, eelam, earth, globe, short story, essays, தமிழ், புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள், பதிப்பகம், எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர், நாவலாசிரியர், மின்னூல், புத்தகச் சந்தை, புத்தகக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, புத்தக சந்தை, சென்னை, இணையம், இணையதளம், பதிப்பகங்கள், கதாசிரியர், விளம்பரம், நூலகம், நூலகங்கள், தமிழகம், தமிழ்நாடு, இதழ், இந்தியா, பாரதம், மின்னிதழ், இலக்கியம், இதழியல், ஊடகம், கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், Google, eBay, Yahoo, Myspace, wikipedia, orkut, Lottery, Horoscopes, Tattoos, Lyrics, Ringtones, iTunes, News, Baby Names